ஒரு நல்ல நூலகத்தில் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் எவை என்று முடிவெடுத்து, அவை இருக்கும் இடத்தைத் தேடி அறிந்துவந்து, பலரும் பயன் அடையும் வகையில் பாகுபடுத்திவைத்து, பத்திரமாகப் பாதுகாத்துத் தருவதில்... ஆழ்ந்த அறிவும் அர்ப்பணிப்பும்கொண்ட நூலகர்களின் பங்கு மகத்தானது. இவர்களைத் தட்டிக்கொடுத்து, ஊக்குவித்து, வழிநடத்தும் நூலக இயக்குநர் என்ற பொறுப்பு இன்றைய சூழலில் மிகமிக முக்கியமானது.

மாநில அரசின் அதிகாரிகள் அதைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட்டு இருப்பதாக, கடுமையாகக் கண்டித்து இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். நூலக அறிவியலை முதுகலைப் பட்டமாக முறைப்படி கற்றுணர்ந்த, நூலகத் துறையில் பதினைந்து வருட அனுபவம்கொண்ட ஒருவரைத்தான் பொது நூலகங்களுக்கான இயக்குநர் பதவியில் நியமிக்க வேண்டும் என்ற தெளிவான சட்டங்கள் இருந்தும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரியையே இந்தப் பதவிக்கு நியமித்ததைச் சுட்டிக்காட்டி, அரசின் சமீபத்திய உத்தரவை ரத்துசெய்து இருக்கிறார் நீதியரசர் கே.சந்துரு.

'ஒரு மனிதனின், அவனுடைய இனத்தின், கலாசாரத்தையும் சரித்திரத்தையும் அழிக்க வேண்டும் என்றால், அங்கே இருக்கும் நூலகங்களை அழித்தாலே போதுமானது' என்று சொல்லி, அவ்வாறு அரங்கேறிய சரித்திரச் சதிகளை மேற்கோள் காட்டியதோடு, 'ஒரு நூலகத்தைச் செயல் இழக்கச் செய்வதற்கு அதை மூடக்கூட வேண்டியது இல்லை... பொருத்தமற்ற ஒருவரை அதற்குப் பொறுப்பாளர் ஆக்கினாலே போதுமானது' என்று கூறி, நிலைமையின் விபரீதத்தைப் புரியவைத்து இருக்கிறார் அவர்.

தேடித் தேடி தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்த 'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத அய்யர் பெயரால் விருதை வழங்கி, அதைப் பெருமையோடு பேசி இருக்கும் தமிழக முதல்வர் இப்போதேனும் உணர வேண்டும் நூலகங்களின் அருமையையும் பெருமையையும்.

'பாவம் பக்தன்' என்று இரக்கப்பட்டு ஆண்டவன் ஒரு சந்தனக் காட்டையே கொடுக்க... அருமை தெரியாத அந்தப் பக்தன் காட்டைக் கரியாக்கிக் காசு பார்த்தானாம். அரசு நூலகத் துறையில் மட்டும் அல்ல... இந்தக் கதை எந்தத் துறையிலுமே நடக்க அனுமதிக்கக் கூடாது!