Published:Updated:

சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாங்கள் மத்திய அரசை கைவிடுவோம்-கருணாநிதி

விகடன் விமர்சனக்குழு
சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாங்கள் மத்திய அரசை கைவிடுவோம்-கருணாநிதி
சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாங்கள் மத்திய அரசை கைவிடுவோம்-கருணாநிதி
சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாங்கள் மத்திய அரசை கைவிடுவோம்-கருணாநிதி

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால், நாங்களும் அவர்களை கைவிட்டுவிடுவோம் என்று சென்னையில் நடந்த விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''நான், திருமாவளவனிடம் மனம் விட்டு பேசக்கூடியவன், அறிவுரைகள் கூறுவதுடன், உடல்நலம் பேண உபதேசமும் செய்யக்கூடியவன். மேடையில் அமர்ந்திருக்கும் அவருடைய தயாருக்கு திருமாவளவன் திருமணம் செய்யாதது ஒரு கவலை.

##~~##
அவரை அரசியலுக்கு கொண்டு வந்த தலைவர்களை அவர் அங்கீகரித்து பேசும்போது எனக்கு ஒரு கவலை உள்ளது. நமக்கு அறிமுகமான தலைவர்களை திருமாவளவன் மகிழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை ஆளாக்கிய அண்ணாவை மறந்து விடுகிறார். காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கார் போன்ற தலைவர்களின் படங்களை விளம்பரங்களில் போடுகிறீர்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. என்னை ஆளாக்கிய அண்ணாவை மறந்து விடுவதால், ஞாபகப்படுத்துவதற்காக இதை கூறுகிறேன்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பிறந்தநாள் விழாவில் தேர்தல் பிரசாரமா? என்று யாரும் கேட்க கூடாது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று மாநில அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. மத்திய அரசும் இந்த திட்டத்தை கைவிட்டால், நாங்களும் உங்களை கைவிட்டுவிடுவோம். பயமுறுத்தவில்லை. பாசத்தின் காரணமாக எச்சரிக்கை செய்கிறோம். நாங்கள் வாழ வேண்டும். தமிழகம் வளம் சேர்க்க வேண்டும் என்பதால் சேது சமுத்திர திட்டத்தை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.