Published:Updated:

தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது!

தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது!
தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது!
தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது!

சென்னை: தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (1ஆம் தேதி) தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பிற அணி செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

##~~##
கூட்டத்தில், கட்சியின் ஆக்கப் பணிகள், எதிர்கால திட்டங்கள், பாராளுமன்ற தேர்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், தே.மு.தி.க.வில் 7 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டாலும், இன்னும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அதனால், அவர்கள் 7 பேர் குறித்தும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.