Published:Updated:

இடைகால தலைவராக டால்மியா தொடர பி.சி.சி.ஐ. செயற்குழு கூட்டத்தில் முடிவு!

விகடன் விமர்சனக்குழு

கொல்கத்தா: பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் டால்மியா, அந்த பதவியில் தொடர கொல்கத்தாவில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று கொல்கத்தாவில் கூடியது. இதில் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சார்பாக என்.சீனிவாசன் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

##~~##
இந்த செயற்குழு கூட்டத்தில், வரும் 29ஆம் தேதி சென்னையில் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர கூட்டம் நடக்கும் வரை இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா, இடைக்கால தலைவராக தொடர்வார் என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.