
புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை (4 ஆம் தேதி) பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா செல்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் 'ஜி-20 உச்சி மாநாடு' 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 8வது மாநாடு ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வரும் 5 ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
##~~## |
இந்த மாநாட்டில் 20 நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை (4ஆம் தேதி) செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்கிறார். 5ஆம் தேதி ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், வரும் 7 ஆம் தேதி டெல்லி திரும்புகிறார்.
இதுவரை நடைபெற்ற அனைத்து ஜி-20 மாநாடுகளிலும் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.