Published:Updated:

தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி கொலை:மதுராந்தகத்தில் பரபரப்பு!

தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி கொலை:மதுராந்தகத்தில் பரபரப்பு!

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி கொலை:மதுராந்தகத்தில் பரபரப்பு!

மதுராந்தகம் அரசு பணிமணையில் ஊழியராக வெங்கடேசன் (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், தே.மு.தி.க. ஒன்றிய அவைத் தலைவராகவும் இருக்கிறார். இவரது மனைவியும் தே.மு.தி.க. ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அரசு பணிமனை ஊழியரான வெங்கடேசன், கூடவே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றார்.

இந்நிலையில், மொரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர், நேற்று வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அவரை சந்திப்பதற்காக வெங்கடேசன், ஐய்யனார் கோவில் பகுதிக்கு இரவு 8 மணிக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், சைலோ காரில் வந்த 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வெங்க்டடேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்த வெங்கடேசனை சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமணையில் அனுமதித்துள்ளனர். அங்கே, சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

##~~##
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்த போலீசாருக்கு, வெங்கடேசனை வெட்டிய மர்ம கும்பல் காரில் சென்னையை நோக்கி தப்பித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடத் தொடங்கினர். இந்நிலையில், தாம்பரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், 4 கொலையாளிகளை மடக்கி பிடித்து, தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

செய்தி, படம்: பா.ஜெயவேல்
அடுத்த கட்டுரைக்கு