Published:Updated:

சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

Vikatan Correspondent
சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!
சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!
சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

நியூயார்க்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர வன்முறை வெடித்தது.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு (நீதிக்கான சீக்கியர்கள்) குற்றம் சாட்டி உள்ளது.

அந்த அமைப்பும், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சார்பிலும், நியூயார்க் கிழக்கு மாகாண நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டு குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த புகாரை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி, சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்.

தற்போது, சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கி இருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க சட்டத்தின்படி, நீதிமன்றம் சம்மன்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

##~~##
சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, அது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறினார்.
"கலவரம் நடந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு சம்மன் வந்திருப்பது திகைப்பை அளிக்கிறது. அது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
சோனியாவுக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், மத்திய அமைச்சர் கமல்நாத் போன்ற தலைவர்களுக்கு எதிராகவும் இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. ஆனால், அந்த வழக்குகள் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.