Published:Updated:

லலித் மோடிக்கு ஆயுட்கால தடை?

Vikatan Correspondent
லலித் மோடிக்கு ஆயுட்கால தடை?
லலித் மோடிக்கு ஆயுட்கால தடை?
லலித் மோடிக்கு ஆயுட்கால தடை?

புதுடெல்லி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நிதி முறைகேடு செய்த லலித்மோடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுட்கால  தடை விதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவாக காரணமாக இருந்த லலித்மோடி, நிதி முறைகேடு செய்ததாக நீக்கப்பட்டார். லலித்மோடி மீதான புகார் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணை நடத்தியது.

கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் அருண்ஜேட்லி, நிதி கமிட்டி தலைவர் ஜோதி ரத்யா சிந்தியா, ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் சிராயு அமீன் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்று இருந்தனர். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து நேரில் விளக்கம் அளிக்காமல் லலித்மோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு லலித்மோடி மீது விசாரணை நடத்தி 133 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளது. இதில், லலித்மோடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். சேர்மனாக இருந்த போது அவர் தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். இரண்டு ஐ.பி.எல். அணிகளுக்கான ஏலத்தின் போது அவர் 2 அணிகளுக்கு சாதகமாக இருந்துள்ளார். மேலும் கொச்சி அணிக்கு எதிரான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

##~~##
இந்நிலையில், ஐ.பி.எல். நிதி முறைகேட்டில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் லலித்மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய சிறப்பு குழுவில் லலித்மோடி மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் லலித் மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்க முடிவும். மொத்தம் உள்ள 31 ஓட்டில் 21 ஓட்டுகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.