Published:Updated:

காமன்வெல்த்: இலங்கையை நீக்க தி.மு.க. வலியுறுத்தல்!

காமன்வெல்த்: இலங்கையை நீக்க  தி.மு.க. வலியுறுத்தல்!
காமன்வெல்த்: இலங்கையை நீக்க தி.மு.க. வலியுறுத்தல்!
காமன்வெல்த்: இலங்கையை நீக்க  தி.மு.க. வலியுறுத்தல்!

புதுடெல்லி: காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. வலியுறுத்தியது.

மக்களவையில் இன்று இலங்கை பிரச்னையை எழுப்பி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.

அப்போது, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலு வலியுறுத்தினார்.

##~~##
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினர் முகாமிட்டுள்ளதாக புகார் தெரிவித்த டி.ஆர்.பாலு, போருக்கு பின் இலங்கையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் என்றார்.
தமிழர்கள் காணாமல் போனதை என்.ஜி.ஓ, மனித உரிமை சங்கங்கள் உறுதி செய்துள்ளதாகவும் டி.ஆர்.பாலு கூறினார்.