Published:Updated:

கச்சத்தீவு: மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் திருத்தம் தேவை- அ.தி.மு.க வலியுறுத்தல்

Vikatan Correspondent

புதுடெல்லி: கச்சத்தீவு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் திருத்தம் தேவை என்று மக்களவையில் அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.

மக்களவையில் இன்று கச்சத்தீவு பிரச்னையை எழுப்பிய பேசிய அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை, கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என பிரமாண பத்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனிடம் இருந்தது என்று தெரிவித்த தம்பிதுரை, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்தது தவறு என்றார்.

##~~##
மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வாகும் என்றும் தம்பிதுரை கூறினார்.