Published:Updated:

பிரதமர் பதவிக்கு போட்டியில்லை: நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு!

பிரதமர் பதவிக்கு போட்டியில்லை: நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு!
பிரதமர் பதவிக்கு போட்டியில்லை: நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு!
பிரதமர் பதவிக்கு போட்டியில்லை: நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு!

அகமதாபாத்: வரவிருக்கும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், 2017 ஆம் ஆண்டு வரை தாம் குஜராத் முதலமைச்சர் பதவியில் நீடிக்கப்போவதாக மோடி அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் மோடியை பார்த்து," விரைவிலேயே இந்த நாட்டின் பிரதமராக வந்து நீங்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவீர்களா?" எனக் கேட்டான்.

##~~##
அதற்கு பதிலளித்த மோடி," ஏதாவது ஒன்றாக ஆவது குறித்து நாம் கனவு காணக்கூடாது; ஆனால் அதற்காக ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு வரை (முதலமைச்சராக) சேவையாற்றுவதற்காக,  குஜராத் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே அதுவரை நான் உங்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன். வேறு எந்த கனவும் எனக்கு இல்லை" என்றார்.

பிரதமர் வேட்பாளராக போட்டியில்லை

மோடியின் இந்த பதில், பிரதமர் வேட்பாளராக அவர் போட்டியிடப்போவதில்லை என்பதையே வெளிப்படுத்தி உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டிருந்தார். அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த பா.ஜனதா, விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட திட்டமிட்டிருந்தது.

பா.ஜனதா அதிர்ச்சி

இந்த சூழ்நிலையில் மோடியின் இந்த அறிவிப்பு பா.ஜனதா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.