Published:Updated:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிப்பு!

Vikatan Correspondent
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (7ஆம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 5ஆம் தேதி தொடங்கி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் போது, உணவு பாதுகாப்பு மசோதா முக்கியமானதாக முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று ஓய்வூதிய மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

##~~##
மேலும், நிலக்கரி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம், தெலங்கானா விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் பெரிதும் பேசப்பட்டன. எதிர்கட்சிகளின் அமளியால் பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் பல மசோதாக்களை நிறைவேற்ற ஏதுவுவாக வரும் 7ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.