Published:Updated:

பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

Vikatan Correspondent
பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!
பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் இயங்கி வந்த ஓம்சக்தி பட்டாசு ஆலை விபத்தில் 40 பேர் பலியான பயங்கர சம்பவத்தை அத்தனை எளிதில் மறக்க முடியாது.

தமிழகத்தையே உலுக்கிய  இந்த விபத்தில் பலியான 40 பேருக்கும் முதலிப்பட்டியில் நினைவு தூபி அமைக்கப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகும் இந்த ஒராண்டில் 13 வெடி விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இந்த விபத்துக்களில் 26 பேர் அநியாயமாக உயிர் இழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இதுவென்றால், இந்த விபத்துக்களால் ஊனமுற்றோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்... பட்டாசு ஆலை விபத்துக்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிர் பலிகளை தடுப்பது எப்போது?

பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 700க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரே நாளில் 40 பேர் பலியாகினர்.

அதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த இந்த பட்டாசு ஆலைகளின் உயிர் இழப்புகள் விபரீதம் அப்போதுதான் வெளி உலகத்திற்கே தெரிந்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளில் நடக்கும் விதிமுறை மீறல்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டது. ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து சம்பவங்களும், உயிர் இழப்புக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

ஆய்வுத் துறையினரின் லஞ்சம்:

விதிமுறை மீறல்களை ஆய்வு செய்ய சிவகாசி ஆர்.டி.ஓ. ரங்கன் தலைமையில் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் இந்த குழுவினர் விதிமுறைகளை மீறி செயல்படும் 50க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ்சை சஸ்பென்ட் செய்துள்ளனர்.

பாடம் படிக்காத பட்டாசு ஆலைகள்...பலியாகும் உயிர்கள்!

ஆனால் விதிமுறை மீறல்களை ஆய்வு செய்யும் இந்த குழுவினர் 'லஞ்சம் வாங்கிக்கொண்டு சின்ன பட்டாசு ஆலைகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கின்றனர். பெரிய பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை' குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. ஆனாலும் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் விபத்துக்களும், உயிர் இழப்புகளும் தொடர்ந்து இருந்து வருவதுதான் சோகமான விஷயம்.

கலெக்டரின் கார் டிரைவர் பேரம்:

இதேபோன்று அண்மையில், கலெக்டர் அலுவலகம் வந்த சில பட்டாசு ஆலை

##~~##
உரிமையாளர்களிடம், கலெக்டரின் கார் டிரைவர் வரதராஜன் என்பவர், 'உங்கள் பிரச்னைகளை நான் பார்த்துக்கிறேன். கலெக்டர் டிரைவர் நான். நான் என்ன சொன்னாலும் கலெக்டர் ஹரிகரன் கேட்பார். ஒரு லட்சம் கொடுங்கள். உங்கள் பட்டாசு ஆலை பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்' என்று சொல்லி பேரம் பேசினாராம். இந்த விஷயம் கலெக்டரின் காதுக்கு போக, டிரைவரை டிரான்ஸ்பர் செய்ய சொல்லியிருக்கிறார்.
'மற்றவர் உயிர் போனாலும் பரவாயில்லை... எனது சொத்து பெருகினால் போதும்...' என்ற அளவுக்கு மாறிவிட்ட நம் மக்களின் மனப்பாண்மையை என்ன சொல்லி நோவது..?
செய்தி:
எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்