Published:Updated:

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு!

Vikatan Correspondent
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு!
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு!
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு!

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவரது இல்லத்தில், சுப்பிரமணிய சாமி சந்தித்து பேசினார்.

சமீபத்தில் தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துக் கொண்ட  சுப்ரமணிய சாமி, இலங்கை சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்தும், தற்போது சிறையில் இருக்கும் மீனவர்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

##~~##
அப்போது, 'இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுதலை செய்யப்படுவார்கள்' என்று ராஜபக்சே உறுதி அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ராஜபக்சேவின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் மற்றும் நிதித்துறை அமைச்சர் அமுனுகாமா ஆகியோர் உடன் இருந்தனர்.