பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

கணேஷ்குமார், திருமங்கலம்.

கழுகார் பதில்கள்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பாரா?

கழுகார் பதில்கள்
##~##

அவரை முதலில் அவரது அப்பாவின் பிரச்னையைத் தீர்க்கச் சொல்லுங்கள். எந்த ஆட்சியைக் கொண்டுவர 'அணிலாக’ இருந்தார்களோ... அவர்களே முதுகில் தடவிக்கொடுக்காமல் முகத்தில் மூன்று நாமங்களைப் போட்டதை எதிர்த்து முதலில் விஜய் குரல் கொடுக்கட்டும். அப்புறம் ஆரம்பிக்கலாம் கட்சி!

சீர்காழி சாமா, தென்பாதி.

கழுகார் பதில்கள்

ஒரு அரசியல்வாதி பணம், புகழ், பதவி போன்றவற்றில் எதைப் பெரிதும் விரும்புவார்?

முதலில் புகழ். அதன் மூலம் பதவியைக் கைப்பற்ற முனைவார்கள். அந்தப் பதவி, செல்வம் சேர்க்கும். எனவே மூன்றும் இணை பிரியாதவை. சேவை செய்வது பற்றி நீங்களே கேட்கவில்லை. சரிதான்!

 தி.கருணாநிதி, விழிதியூர்.

கழுகார் பதில்கள்

தொல்.திருமாவளவனின் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் என்கிறார்கள். டி.பி.ஐ என்றும் சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றா?

இல்லை. 'தலித் பேந்தர் ஆஃப் இந்தியா’ என்பதன் சுருக்கமே டி.பி.ஐ. அந்த அமைப்பில் ஆரம்ப காலத்தில் திருமா இருந்தார். அதன் பிறகு தொடங்கிய கட்சிதான், விடுதலைச் சிறுத்தைகள்.

 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

அரசியல்வாதி, நிலவுக்குச் சென்றால்..?

நிலவிலும் நில ஆக்கிரமிப்பு நடக்கும்!

 மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

கழுகார் பதில்கள்

2011-ம் ஆண்டு மட்டும் உலகில் 103 பத்திரிகையாளர்கள் கொல்லப்​பட்டு இருக்கிறார்களே?

சமீபத்தில், பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பத்திரிகையாளன், 'பத்திரிகையாளர்கள் இனி இங்கு வாழ முடியாது’ என்று எழுதினான். இலங்கை​யில் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த லசந்த கொல்லப்பட்டார். அவருக்கு அறிமுகமான பல பத்திரிகையாளர்களே, இலங்கைக்குள் போக முடியாமல் தவிக்கிறார்கள். சகிப்புத்தன்மை அற்ற அரசாங்கத்தாலும், நிழல் உலக மனிதர்களாலும் பத்திரிகையாளர்கள் பழிதீர்க்கப்படுகிறார்கள். 'எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும்  தெய்வம்’ என்றான், பாரதி. அந்த இரண்டும்தான் காப்பாற்ற வேண்டும்!

 பொ.மாரிமுத்துக் குமார், திருச்சி-5.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

விலை இல்லாப் பொருள், இலவசம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பிச்சை, யாசிப்பு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? சொல்லும் போது, ஒன்று கேவலமாகவும் இன்னொன்று மரியாதையாகவும் தெரிகிறது. ஆனால், அர்த்தம் ஒன்றுதான்!

 யூ.உஷா பூவராகவன், திருப்பூர்.

கழுகார் பதில்கள்

'அரசியல்வாதிகளுக்கு ஓய்வு அளிப்பது சாத்தியம் இல்லை’ என்கிறாரே தலைமைத் தேர்தல் அதிகாரி குரேஷி?

அரசியல் என்பது தொண்டு. உடம்பில் தெம்பு இருக்கும் வரை எவரும் தொண்டு செய்யலாம். சிலர் அதை வர்த்தகமாக்கியதும் அல்லாமல் தள்ளாத வயதிலும் அதைத் தொடரும்போதுதான் கோபம் வருகிறது.

 ரமேஷ்வரன், விளாத்திகுளம்.

கழுகார் பதில்கள்

'தமிழீழம் அமைவதற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்க மாட்டோம்’ என்கிறாரே கருணாநிதி?

முப்படைகளையும் வட கிழக்கு மாகாணங்களின் முக்கால் பகுதியையும் தனது ஆளுகைக்குள்​வைத்து அறிவிக்கப்பட்ட  தமிழீழ அரசாங்கம் அங்கே இருந்த​போதெல்லாம், அதற்கு எதிராக இருந்து விட்டு... இப்போது கருணாநிதி இப்படிப் பேசுகிறார். ஏற்கெனவே, அவர் ஃபெயில் ஆன பாடம் அது!

 எஸ்.வசந்த குமார், திருமயம்.

கழுகார் பதில்கள்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா?

போட்டியிடும் என்றே நினைக்கிறேன். ஆனால், தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்துவிடக் கூடாதே என்று இரண்டு பேர் அளவுக்கு அதிகமாகப் பதுங்க ஆரம்பித்துள்ளார்கள்.

 முருகேச சுந்தரம், ஆரணி.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தது யார்?

அடுத்தவரை விமர்சிப்பதில் அசகாயசூரன் என்று பெயர் எடுத்தவர் இத்தாலியைச் சேர்ந்த அரிட்டினோ. பேனாவை, போர்க்கருவி போல பயன்படுத்தியவன் என்பார்கள். தான் வாழ்ந்த காலத்தில் (1492-1556) எல்லாப் பெரிய மனிதர்களையும் பேனாவால் குத்திக் கிழித்தான். அவனது கல்லறையில் இப்படி எழுதப்பட்டு உள்ளதாம். 'டஸ்கனிக் கவிஞன் அரிட்டினோ இங்கே துயில்கிறான். தெய்வத்தைத் தவிர மற்ற அனைவரையும் தூற்றித் திரிந்தவன்’ என்று!

அரிட்டினோ வாழ்ந்த காலத்தில், ''ஏன் நீங்கள் தெய்வத்தை மட்டும் விமர்சிக்காமல் விட்டு வைத்து இருக்கிறீர்கள்?'' என்று ஒருவன் கேட்டானாம்.

அரிட்டினோ சொன்ன பதில்: ''எனக்குத்தான் அவனைத் தெரியாதே!''  

யாரை எல்லாம் தனக்குத் தெரியுமோ, அவர்கள் அத்தனை பேரையும் விமர்சித்தான் அரிட்டினோ. இப்போது அப்படி யாராவது உண்டா? அப்படி இருக்கத்தான் முடியுமா?

 முகேஷ், அவிநாசி.

கழுகார் பதில்கள்

ஸ்டாலின் - அழகிரி சண்டை ஓயவே ஓயாதா?

கழுகார் பதில்கள்

மூட்டி விடுபவர்(கள்) இருக்கும் வரை ஓயாது!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு