என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தலையங்கம் - கிருமிகள் இலவசம்!

தலையங்கம் - கிருமிகள் இலவசம்!

தலையங்கம் - கிருமிகள் இலவசம்!
தலையங்கம் - கிருமிகள் இலவசம்!

மது அரசுக்குச் சுகாதாரத்தின் மீது முழுமையான அக்கறை இருக்கிறதா என்ற கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் அண்மையில் பெறப்பட்ட ஒரு தகவல், கவலையான பதிலையே அளிக்கிறது. சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் குடிநீரில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல... இந்தத் தண்ணீர் விஷத்தன்மை நிறைந்து இருப்பதும் சோதனைகளில் தெரியவந்திருக்கிறது.

குடிநீரோடு கழிவு நீரும் கலந்து வருகிறது என்று பொதுமக்கள் ஆங்காங்கே புகார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதையே உறுதிப்படுத்தும் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவே, மாநகராட்சி நிர்வாகம் தந்திருக்கும் இந்தத் தகவலைப் பார்க்க வேண்டி உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் தண்ணீருக்குத்தான் இந்த நிலைமை என்று இல்லை. காசு கொடுத்து வாங்கும் 'சுத்திகரிக்கப்பட்ட’ குடிநீரிலும் கிருமிகள் கலந்து இருக்கின்றனவாம். இதுவும் சென்னை மாநகராட்சி நிர்வாகமே கொடுத்திருக்கும் தகவல்தான்!

தலைநகரிலேயே குடிநீரின் 'தூய்மை’ இப்படி அதிரவைக்கும் நிலையில் இருக்கிறது என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளின் கதி எப்படி இருக்கும்? சுகாதாரத்தின் முக்கியத்துவம் கருதி, கிராமப் புறங்களில் வீடுகள்தோறும் கழிப்பறை கட்டிக்கொள்வதற்காக இது வரை ஒதுக்கப்பட்டுவந்த அரசாங்க மானியத்தை உயர்த்தி அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?