Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

எஸ்.கங்காதேவி, வால்பாறை.

கழுகார் பதில்கள்

கற்புக்கரசி கண்ணகி சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவிப்பது முதல்வருக்குத் தெரிந்துதானே நடந்திருக்கும்?

கழுகார் பதில்கள்

ஆராயாமல் (அதாவது முதல்வருக்குத் தெரிவிக்காமல்) நடந்துகொண்டால், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்று தலை உருண்டுவிடும் என்று அமைச்சர்களுக்குத் தெரியாதா என்ன? ஜெயலலிதாவிடம் ஏற்பட்​டுள்ள மாற்றத்தின் அறிகுறி இது. கண்ணகியை வணங்குவோம்!

சு.முத்துக்குமார், திருவண்ணாமலை.

கழுகார் பதில்கள்

புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கருணாநிதி அறிவித்து இருப்பது?

##~##

  தேர்தல் என்றாலே எப்போதும் கருணாநிதிக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. ஆனால், இப்போது தேர்தல் கசக்கிறது. தோல்வி பயம் இதற்குக் காரணம் இல்லை. தோற்போம் என்பது தெரிந்தே, எத்தனையோ தேர்தல்களில் தைரியமாக போட்டி யிட்டுள்ளார். ஆளும் கட்சி பணம் செலவழிக்கும், தேர்தல் கமிஷன் அமைதியாக இருக்கும் என்பது திருச்சியிலேயே தெரிந்து போனது. அதற்குப் பிறகு நடந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. களம் இறங்கியதே. எனவே, புதுக்கோட்டைப் புறக்கணிப்புக்கு உண்மையான காரணம் வேறு. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கும் பெரியண்ணன் அரசுவை நிறுத்த நினைத்தார் ஸ்டாலின். ஆனால், முன்னாள் அமைச்சர் ரகுபதி நின்றால் நல்லது என்று அழகிரி நினைத்தார். அரசுவுக்கும் ஸ்டாலினுக்குமான நட்பு அனைவரும் அறிந்ததுதான். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் வந்தார்கள். அதில் நான் மதிப்பது ரகுபதியை மட்டும்தான்’ என்று ஒரு திருமண வீட்டில் பகிரங் கமாகச் சொன்னவர் அழகிரி.

புதுக்கோட்டையில் அ.தி.மு.க-வுடன் மோதல் வருவதற்கு முன்னதாக, இந்த மோதலைத் தவிர்க்கலாம் என்று கருணாநிதி நினைத்திருக்கலாம்!

 சிற்றம்பலம், மதுரை.

கழுகார் பதில்கள்

மதுரை ஆதீன மடத்துக்கு நித்தியானந்தரை வாரிசாக நியமித்தது சரியா?

என்னுடைய கேள்வி... மதுரை ஆதீன மடத்துக்கு இப்போதைய அருணகிரிநாதர் நியமிக்கப்பட்டதே சரிதானா என்பதுதான். ஒரு காலத்தில் கருணாநிதி, வீரமணி மேடைகளில் நடுநாயகமாக இருந்தார் அவர். அவர்களுக்குள் சண்டை என்றதும் சமாதானப் புறாவாகப் போனார். இரண்டு பேருமே மதிக்கவில்லை என்றதும் எம்.நடராஜன் பக்கம் ஒட்டினார். ஜெ. - எம்.என். இருவரையும் சேர்த்து வைக்கப் படாதபாடுபட்டார். சைரன் வைத்த கார்... மேடையில் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டியது.... யார் அழைத்தாலும் பேசப்போவது... என்று சைவம் தவிர்த்து அசைவக் காரியங்களில்தான் அதிகம் இறங்கினார் அருணகிரி.

பாண்டிய மன்னருக்கு சைவப்பற்று நீங்கி வைணவப் பற்று வந்ததையடுத்து மனமாற்றம் ஏற்படுத்தவே திருஞானசம்பந்தர் மதுரை வந்தார். அவர் தங்கிய இடம் மதுரை ஆதீனமாக மாறியது. இப்போதைய அருணகிரி - நித்தியானந்தா செயல்பாடுகள் ஆதீனத்தை சிறுமைப்படுத்துவதாக உள்ளது!

 கே.ஆனந்தன், வால்பாறை.

கழுகார் பதில்கள்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று, நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்து விட்டதே?

'அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152 அடி வரை உயர்த்தினாலும் கூட நிலநடுக்கப் பாதிப்புகள் இன்றி அணை பாதுகாப்பாகவே இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களை வைத்து இது உறுதிப்படுத்தப்பட்டது’ என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு அறிக்கை கொடுத்துள்ளது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி. 'தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளாவுக்குப் பாதுகாப்பு’ என்று தீர்மானம் போட்டவர்கள், இனியாவது அதைச் செயல்படுத்த வேண்டும்!

 கே.நரேந்திரன், திருப்பூர்.

கழுகார் பதில்கள்

அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக காங்கிரஸ் வழி விடுமா?

விடாது!

சோனியாவைப் பிரதமர் ஆக விடாமல் தடுத்தவர் கலாம் என்று, அப்போது தகவல் பரவியது. பாரதிய ஜனதா ஆட்களால் முன்மொழியப்பட்ட கலாமை காங்கிரஸ் விரும்பாது.

 மு.மகேந்திரன், மதுரை.

கழுகார் பதில்கள்

'இலங்கைத் தமிழர்களின் எண்ணங்களுக்கு விரோதமாக, நான் செயல்பட்டதே இல்லை’ என்கிறாரே கருணாநிதி?

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்​பட்டபோது, பெரியார் எப்போதோ சொன்ன உதாரணத்தைக் கருணாநிதி சொன்னார். 'நாங்களே அடிமைகளாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியுமா?’ என்று, ஈழத்தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னதைச் சொல்லி, தன்னுடைய கடமையைத் தட்டிக்கழித்தவர் கருணாநிதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிமையாக இருந்த கருணாநிதி, இப்போது விடுதலை பெற்றுவிட்டாரா? முதலமைச்சர் பதவி இல்லாததைத்தான், கருணாநிதி விடுதலை என்று நினைக்கிறாரோ?

 கே.ஆர்.சுப்பிரமணி, பட்டுக்கோட்டை.

கழுகார் பதில்கள்

புதுக்கோட்டை தேர்தலில் பலரும் போட்டியிடாதது யாருக்கு சந்தோஷம்? யாருக்குத் துக்கம்?

ஆளும் கட்சிக்கு சந்தோஷம். பணம் செலவழிக்க வேண்டியது இல்லை!

பணம் வாங்கிவிட்டு ஓட்டுப் போடுபவர்களுக்குத்தான் துக்கம். நான்கைந்து கட்சிகள் நின்றால்தானே பணம் கிடைக்கும்? எனவே, தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இப்போதே வாக்காளர்களுக்குக் கோபம் வந்திருக்கும்!

 சித.சிதம்பரம், காரைக்குடி.

கழுகார் பதில்கள்

மதுரை ஆதீனத்தின் செயல்பாடு குறித்து கருத்துச் சொல்ல மறுத்து விட்டாரே கருணாநிதி?

கழுகார் பதில்கள்

அறிவாலயம் திறப்பு விழாவின் போது, தனது மோதிரங்களைக் கழற்றித் தந்தவர் ஆதீனம். அதைத் திரும்பக் கேட்டு விட்டால், என்ன ஆவது?

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்

'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க் கட்சிகளும், பத்திரிகைகளும் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு பார்ப்பதாக’ ஜெயலலிதா சொல்கிறாரே?

  எதிர்க்கட்சிகள் இன்னும் சரியாக ஜெயலலிதாவின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. சில அமைச்சர்கள், அதிகாரிகள் அளவுக்குமீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சசிகலா ஆட்கள் இல்லாதது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. எனவே, எதிர்க்கட்சிகளைக் குறை சொல்வதை நிறுத்தி விட்டு, தன்னுடைய சகாக்களின் தவறுகளை ஜெயலலிதாவே பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டும்!

 தி.கருணாநிதி, விழிதியூர்.

கழுகார் பதில்கள்

'கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா தினமும் சட்டமன்றத்துக்கு வந்தாரா?’ என்று கேட்கிறாரே விஜயகாந்த்?

  தலைமைக்கான தகுதிகளில் ஒன்றாக, 'சட்டமன்றத்துக்குச் செல்லாமல் இருப்பது’ என்பதை மாற்றி விடுவார்கள் போல!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்