Published:Updated:

அண்ணா பிறந்த நாள்:மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்!

அண்ணா பிறந்த நாள்:மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்!
அண்ணா பிறந்த நாள்:மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்!

அண்ணா பிறந்த நாள்:மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: அறிஞர் அண்ணாவின் 105வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது உருவ படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா பிறந்த நாள்:மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்!


அறிஞர் அண்ணாவின் 105-வது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கு அங்கு வந்த முதலமைச்சர்ர் ஜெயலலிதா அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

##~~##
இந்த, நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை மேயர் சைதை துரைசாமி, துணைமேயர், மாவட்ட செயலாளர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட தி.மு.க.வினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, தமிழக கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.மோ அன்பரசன், மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு