Published:Updated:

உ.பி. கலவரம்:முதல்வர் அகிலேஷ் யாதவ் பார்வையிட்டார்!

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவர பகுதிகளை முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் முஷாஃபர்நகர் மாவட்டம் கவால் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை கடந்த மாதம் 27-ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கிண்டல் செய்துள்ளார். இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

##~~##
ஒரு வார காலத்திற்கு பிறகு தற்போது அங்கு அமைதி திரும்பியதை தொடர்ந்து, நேற்று முதல் அங்கு 12 நேரம் வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தியும் கலவரம் பாதித்த பகுதியை நாளை பார்வையிட உள்ளனர்.
இந்நிலையில், கலவரம் பாதித்த முஷாஃபர்நகர் பகுதியை, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் முதல் முறையாக இன்று பார்வையிட்டார். முதலில் அவர் கவால் கிராமத்துக்கு சென்றார். கடந்த 27–ந்தேதி கொல்லப்பட்ட ஷானவாஸ் தந்தை சலீம் மற்றும் பாதித்த மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அடுத்த கட்டுரைக்கு