Published:Updated:

பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க மாட்டோம்: காங்கிரஸ்

Vikatan Correspondent
பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க மாட்டோம்: காங்கிரஸ்
பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க மாட்டோம்: காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை தேர்தலுக்கு முன்பு அறிவிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க, தங்களது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பக்தசரண் தாஸ், காங்கிரஸ் கட்சி சார்பிலான பிரதமர் வேட்பாளர் பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

##~~##
தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காது என்றும் அவர் கூறினார்.
2004, 2009ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், நேரம் வரும்போது இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் தாஸ் தெரிவித்தார்.