Published:Updated:

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலாவுக்கு நேரு விருது!

புதுடெல்லி, மே 10,2011

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலாவுக்கு நேரு விருது!

ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் சமநிலை மேம்பாட்டுக்கு மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், ஜவஹர்லால் நேரு சர்வதேச விருதுக்கு அவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார். ##~~##

2009-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதுக்கு உரியவரைத் தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு டெல்லியில் கூடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தகவலை வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏஞ்சலா மெர்கல் வளரும் நாடுகளின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மார்டின் லூதர் கிங், கான் அப்துல் காஃபர் கான், அன்னை தெரசா, ஆங் சான் சூகி, ஹோஸ்னி முபாரக், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் இவ்விருதினைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.