Published:Updated:

கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

Published:Updated:
கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!
கவிழ்கிறதா என்.ஆர்.காங். அரசு: ராஜினாமா முடிவில் 6 எம்.எல்.ஏ.க்கள்!

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது 6 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் திடீரென ராஜினாமா செய்தால் என்.ஆர்.காங்கிரஸ் அரசு கவிழலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அக்கட்சி சார்பில் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏற்பட்டது.

ரங்கசாமி மட்டுமே அனைத்து நிதியையும் செலவு செய்கிறார். மற்ற அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் நிதியை வழங்குவது கிடையாது என்று ரங்கசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமி இறக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ரங்கசாமி, தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்நிலையில் தற்போதும் ரங்கசாமியின், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஆரம்பித்துள்ளது.

''முதல்வர் ரங்கசாமி, தனது அண்ணன் மகனும், இந்திரா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான தமிழ்செல்வனுக்கே அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கி வருகிறார். புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளில் முதல்வர் மற்றும் தமிழ்செல்வனின் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். இதனால் எங்கள் தொகுதி மக்களிடையே எங்களுக்கு மரியாதை இல்லை'' எனக்கூறி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான கார்த்திகேயன், அங்காளன், நேரு, கல்யாணசுந்தரம், அசோக் ஆனந்த், வைத்தியநாதன் ஆகிய 6 பேரும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~~##
இதையடுத்து, இவர்கள் 6 பேரும் இன்று காலை சட்டமன்றத்திலுள்ள அறசு கொறடா நேரு எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் கூடி மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தின்போது, தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் சபாபதி தற்போது இறங்கியுள்ளார். சுமார் 2 மணி நேரமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் சபாநாயகர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் ராஜினாமா செய்வார்களா? அல்லது தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார்களா? என்பது தெரியவரும்.

ஒருவேளை அவர்கள் 6 பேரும் ராஜினாமா செய்ய நேர்ந்தால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கவிழ வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ந.இள.அறவாழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism