Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''
##~##

'அவர் வருவாரா... பிரிந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா?’... என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே கழுகார்  ஆஜரானார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொழிப்புரை வேண்டாம். செய்தியைச் சொல் லும்!'' என்று கோரிக்கை வைத்தோம்.

''மன்னார்குடி குடும்பத்தில் நடக்கப்போகும் திருமணம் குறித்து கடந்த முறையே முன்னோட்ட மாகச் சில தகவல்களைச் சொன்னேன். சர்ச்சைக் குரிய மூன்று பேரான ம.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் படிப்படியாக வெளியே வந்து விட்டதால் இந்த சுபநிகழ்ச்சி அதிகப்படியான எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளது.

ஜெயலலிதா- சசிகலா ஆகிய இருவரின் பிரிவோம் சந்திப்போம் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடக்கப் போகும் திருமணம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. பல்வேறு வழக்குகளில் ராவணன், திவாகரன், ம.நடராஜன் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்து விட்டது. அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டனர். புதிய வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் மன்னார்குடி குடும்பத்தின் மேல் ஜெ-வுக்குக் கோபம் குறைந்து விட்டதா எனத் தெரியாமல், ஆளும் கட்சியினரும் அதிகாரத் தரப்பும் திகிலில் திரிகிறார்கள். இந்த நிலையில்தான் இந்தத் திருமணங்கள் நடக்க இருக்கின்றன!''

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

''சொல்லும்!''

''ம.நடராஜனின் தம்பி ம.ராமச்சந்திரனை அனைவரும் எம்.ஆர். என்றுதான் அழைப்பார்கள். நடராஜனுடன் இணைந்து அ.தி.மு.க.வைவிட்டு நீக்கப்பட்டவர் இவர். இவரது மகன் ராஜுவுக்கும் பட்டுக்கோட்டை கல்யாண ஓடையைச் சேர்ந்த மகாலெட்சுமிக்கும் வரும் 23-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. 'இதைக் காரணமாக வைத்தே சசிகலா, ஜெயலலி தாவிடம் ஜாமீன் விஷயம் பேசினார். குடும்பத்தில் அனைவரும் சிறையில் இருந்தால், திருமணம் எப்படி நடக்கும்? இதற்கு நீங்கள்தான் உதவி செய்தாக வேண்டும்!’ என்று கோரிக்கை வைத்தாராம். அதன் பிறகுதான் ஜாமீன் கிடைத்துள்ளது. தஞ்சாவூரில் உள்ள அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான தமிழரசி திருமண அரங்கத்தில் நடக்கிறது.  புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தில் நடக்கும் முதல் திருமணம் இது. இதைஅடுத்து, 25-ம் தேதி ம.நடராஜனின் சகோதரி வைஜெயந்திமாலாவின் மகள் பத்மப்ரியா திருமணம் நடக்க உள்ளது. இந்தத் திருமணங்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு வைக்கலாமா வேண்டாமா என்ற ரீதியில் சசிகலா குடும்பத்துக்குள் ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், திருமண அழைப்பிதழில் துளியும் அ.தி.மு.க. சாயல் இல்லை. முதல்வரின் பெயரும் இடம் பெறவில்லை.''

''அது இருக்கட்டும்! சசிகலாவுக்கு அழைப்பு வைத்தார்களா?''

''சசிகலாவை அழைக்காமல் இருப்பார்களா? ஆனால், 'சசி வருவாரா?’ என்பது​தான் தஞ்சாவூரின் தற்போதையத் தவிப்புக்குக் காரணம். இந்தத் திருமணங்​களில் சசிகலா நிச்சயம் கலந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால், கட்சியைவிட்டு நீக்கப் பட்ட எம்.ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா ஆகியோரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா அனுமதிப்பாரா என்பதுதான் கேள்வி!

இந்தத் தகவல்கள் கிடைத்ததும் தன்னைத்தானே சசிகலா நொந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் சோதனை வருது?’ என்று வருத்தப்பட்டாராம். திருமணத்தில் கலந்துகொள்ள அக்கா அனுமதி கொடுப்பாரா என்பதுதான் சஸ்பென்ஸ். அக்காவின் கட்டளையை மீறிச் செல்ல முடியாது, போகாமல் இருந்தால், சொந்தக் குடும்பத்தையே மொத்தமாகக் கை கழுவியதாகிவிடும் என்று தீராத யோசனையில் ஆழ்ந்து விட்டாராம் சசிகலா!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்!  

''இதுவும் ஒரு கல்யாண சமாச்சாரம்தான். ஆனால் கரை வேறு. தி.மு.க-வில் நடந்தது!

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் முத்துராம லிங்கம். இதன் காரணமாக மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, கட்சியின் இளைஞர் அணி மாநாட்டை நெல்லையில் நடத்தும் அளவுக்குக் கட்சியில் செல்வாக்குடன் வலம் வந்தார். அத்துடன், கடந்த முறை இவர் மாநகராட்சித் துணை மேயராகவும் செயல்பட்டார். ஆனால், கடந்த பொதுத் தேர்தலின்போது நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முத்துராமலிங்கம் விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் அதற்கு இசைவு கொடுக்கவில்லை. அதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், நெல்லையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கருப்பசாமி பாண்டியன் சென்றிருந்தார். அதே நிகழ்ச்சிக்கு முத்துராமலிங்கத்தின் தந்தையான காசிப்பாண்டியன் வந்திருந்தார். இருவரும் அருகருகே அமர வைக்கப்பட்டனர். அப்போது, கானா அண்ணாச்சி, 'எப்படி இருக்கீங்க. உடல் நலம் பரவாயில்லையா..?’ என விசாரிக்க, தனது மகனுக்கு கடந்த முறை சீட் கிடைக்க விடாமல் கெடுத்து விட்டார் என்ற கடுப்பில் இருந்த காசிப்பாண்டியன், 'என்னை சாராய வியாபாரின்னு சொன்னியாமே... உன்னைவிட எந்த விதத்திலும் நான் குறைந்தவன் இல்லை..’ என்ற ரீதியில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருக்கிறார்.''

''அப்புறம்?''

''இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி பாண்டியன், திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்ததும் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, 'பொது இடத்தில் வைத்து என்னை அசிங்கப்படுத்தியவரிடம் விளக்கம் கேட்கணும். கல்யாண மண்டபத்தில் சண்டை போடக்கூடாதுன்னுதான் அமைதியா இருந்தேன். அந்தாளு வெளியே வரட்டும் பார்த்துக்கலாம்..’ என எகிறியிருக்கிறார். உடன் இருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் கொதிப்பு அடைந் திருக்கும் 'கானா’ ஆதரவாளர்கள், 'காசிப் பாண்டியன் வாய்க்கு வந்தபடி பேசியபோது, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பக்கத்தில் இருந்திருக்காங்க. ஆனால் அவங்க யாருமே அதைத் தட்டிக்கேட்கிற வகையில் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்ததுதான் வேதனையா இருக்கு’ எனக் குமைகிறார்கள். இந்தப் பஞ்சாயத்து கருணாநிதி வரைக்கும் வந்துள்ளது!''

''அவர் எத்தனை பஞ்சாயத்தைத்தான் பார்ப்பார்?''

''கருணாநிதியைச் சுற்றி ஒரு கைது வளையம் பின்னப்படுவதற்கான முஸ்தீபுகள் தொடங்கி உள்ளன. சென்னை திருவான்மியூரில் வீட்டு​வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஜாஃபர் சேட் மற்றும் முதலமைச்சரின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் உள்ளிட்​டவர்கள் விதிமுறையை மீறி வாங்கி... பில்டிங் கட்டியதாக சர்ச்சை கிளம்பியது. அதில் சில மேல் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இத்தகைய அரசு உத்தரவு போடப்பட்ட காலத்தில் வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரியாக இருந்தவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவரிடம் முழுமையான வாக்குமூலம் ஒன்றை வாங்கி விட்டதாம் அரசு. இது போதாது என்று மாஜிஸ்திரேட் ஒருவர் முன்பாக அவரை உட்கார வைத்து 164 வாக்குமூலத்தையும் வாங்கி விட்டார்களாம்!''

''என்ன சொன்னாராம்?''

''அவர் மொத்தமாகக் கை காட்டிவிட்​டாராம். 'எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சி.எம். ஆபீஸில் இருந்து உத்தரவும் ஃபைலும் வந்தது. நான் கையெழுத்துப் போட்டேன்’ என்று சொன்னாராம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தை நோக்கி அம்பு பாய்கிறது. கருணாநிதியும் அப்போதைய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியையும் உள்ளடக்கியதாக இந்த வழக்கு தயார் ஆகுமாம். கைதுப் படலமும் இருக்கலாம்!'' என்ற கழுகார், மீண்டும் ஜெயலலிதா மேட்டருக்கே வந்தார்!

''ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சியின் செயல்பாடுகளைப்பற்றி புகழும் விதமாக ஆறு புத்தகங்களை வெளியிடுகிறது, செய்தி மற்றும் விளம்பரத்துறை. ஜெயலலிதா ஆங்காங்கே சொல்லிய அரிய வாசகங்கள் அடங்கிய 'அமுத மொழிகள்’, ஜெயலலிதாவின் விழாப் பேச்சுகளின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகள், அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய 'வெற்றிக் கதைகள்’, பத்திரிகைகளின் பாராட்​டில் ஜெ. ஆட்சி ஆகிய புத்தகங்களுடன் தமிழரசு சிறப்பிதழாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சாதனை மலர்கள் வெளியிடப்​படுகின்றன.''

''சரி!''

''வழக்கமாக, இதுபோன்ற அரசு வெளியீடு​களை தமிழக அரசின் அச்சகத்தில்தான் அச்சடிப்பது வழக்கம். இருந்தாலும் அவசரத்துக்கு தனியாரிடமும் அச்சடித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஓர் ஆண்டு சாதனை புத்தகங்களை தனியாரிடம் அச்சடிக்கக் கொடுத் ததில் கடைசி வரை விடாப்பிடியாக இருந்தனராம் அதிகாரிகள்.  

கருப்பு வெள்ளை என்றால் அரசு அச்சகத்தில்தான் அடிக்க​வேண்டும் என்பதால், மலரின் எல்லா பக்கங்​களிலும் வேண்டும் என்றே வண்ணப் பட்டையை டிசைனில் சேர்த்திருக் கிறார்கள் என்கிறார்கள்.''

''சாதனையை அழகாய் சொல்ல நினைத்திருப் பார்கள்!'' என்று கமென்ட் அடிக்க, அதை ரசித்தபடி பறந்தார் கழுகார்!

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், வீ.நாகமணி

 அழகிரி கோஷ்டியில் பரிதி?

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

ஸ்டாலினுடன் ஏற்பட்ட உரசலில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, தி.மு.க-வில் இருந்து ஒதுங்கி இருந்தார். தனது மகள் சந்தியாவின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியை சந்தித்தார். அப்போது, பழைய விஷயங்களை எல்லாம் மனம்விட்டுப் பேசினார். அதனால், திருமணத்துக்கு கருணாநிதியின் வருகையை எதிர்பார்த்து பரிதி காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அழகிரி வந்து மணமக்களை வாழ்த்தினார். 'தி.மு.க-வில் எந்தக் கோஷ்டியிலும் சேராமல் தனி ஆளாக இருந்த பரிதி, இனி அழகிரி கோஷ்டியில் ஐக்கியமாகி விடுவார்’ என்று, திருமணத்துக்கு வந்தவர்கள் முணுமுணுத்​ததைக் கேட்க முடிந்தது.

 மருமகனைப் பழி தீர்த்தாரா சிரஞ்சீவி?

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு மேற் கொண்டனர். இங்கு இருக்கும் விஷ்ணு பிரசாத் என்பவரின் வீட்டில்தான் ரெய்டு. இவர், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கோடி ரூபாய் பணமும், ஏராளமான ஆவணங்களும் இந்த ரெய்டில் சிக்கியதாகச் சொல்கிறார்கள். இந்த அதிரடிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

விஷ்ணுவின் குடும்பம் கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில்களில் கொடி கட்டிப் பறக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன் பல கோடி ரூபாய் அளவுக்கான பரிவர்த்தனைகள் இவர்கள் நிறுவனத்தில் நடைபெற்றதாம். இது, வருமான வரித் துறையினரின் கண்களை உறுத்தியதுதான் முதல் காரணமாகச் சொல்லப் படுகிறது.  

இரண்டாவது காரணம், நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் சுஷ்மிதாவை காதல் திருமணம் செய்து கொண் டவர் விஷ்ணு பிரசாத். சில மாதங்களாக இவர்களுக்குள் பிரச்னையாம். அதனால், டைவர்ஸ் கேட்டு பரஸ்பரம் விண்ணப்பம் செய்தனர். இது, சிரஞ்சீவிக்கு வேதனையையும் கடும் கோபத்தையும்

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

ஏற்படுத்தியதாம். அதனால், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி விஷ்ணு குடும்பத்தைப் பழி வாங்கினார் என்றும் சொல்கிறார்கள்.

 வீரப்பன் உடல் எங்கே?

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சமாதி மேட்டூர் அருகே மூலக்காடு என்ற கிராமத்தில் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், வீரப்பன் சமாதியை மர்ம நபர்கள் சிலர் தோண்டி இருக்கிறார்கள். எதற்காக வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டது?  வீரப்பனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதா... இல்லையா என்பது மர்மமாகவே இருக்கிறது. பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் ஆர்.டி.ஓ. சமாதிக்கு வந்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார். வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரிகார பூஜை செய்வதற்காக சமாதியைத் தோண்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைகிறதாம்.

மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism