Published:Updated:

காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம்: வி.கே.சிங் குற்றச்சாட்டு

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம்: வி.கே.சிங் குற்றச்சாட்டு
காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம்: வி.கே.சிங் குற்றச்சாட்டு
காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம்: வி.கே.சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பல்வேறு செயல்களை செய்து முடிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் அளித்ததாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நாடு சுதந்திரம் அடைந்தது முதல், ஜம்முவில் பல்வேறு செயல்களை செய்து முடிப்பதற்காக அங்குள்ள அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

காஷ்மீர் ஃப்ரீமியர் லீக் போட்டிக்கு, காஷ்மீர் அரசோ, முதலமைச்சர் உமர் அப்துல்லாவோ நிதி அளிக்கவில்லை என்றும், ராணுவம் தான் நிதி அளித்ததாகவும் வி.கே.சிங் கூறினார்.

அமைச்சர்கள் பணம் பெறுவதாக வி.கே.சிங் கூறிய குற்றச்சாட்டிற்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் கட்சி அமைச்சர்கள் யாரேனும் பணம், பெற்றிருந்தால் அவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் தேவேந்தர் சிங் ராணா தெரிவித்துள்ளார்.

##~~##
ராணுவ தளபதியாக வி.கே.சிங் இருந்தபோது அவரால் அமைக்கப்பட்ட உளவுப் பிரிவினர், முறைகேடுகளில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் ராணுவ ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசை கவிழ்க்க ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் உள்நோக்கத்துடன் தம்மீது குற்றம் சுமத்தப்படுவதாக முன்னாள் தளபதி வி.கே.சிங் கூறினார்.