Published:Updated:

துரோகிக்கு பதவியா...? நால்வரணியை வறுத்தெடுத்த ஜெ.!

துரோகிக்கு பதவியா...? நால்வரணியை வறுத்தெடுத்த ஜெ.!
துரோகிக்கு பதவியா...? நால்வரணியை வறுத்தெடுத்த ஜெ.!
துரோகிக்கு பதவியா...? நால்வரணியை வறுத்தெடுத்த ஜெ.!

அரியலூர்: அரியலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த கவிதா ராஜேந்திரனிடமிருந்து கடந்த 21ஆம் தேதி இரவு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. புதிய மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படாத நிலையில், தஞ்சை அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வைத்தியலிங்கம் பொறுப்பு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கவிதா ராஜேந்தினை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை.

கவிதா ராஜேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் பின்னணியையும் விசாரித்தோம்.

தற்போது எம்.எல்.ஏ.வான மணிவேல், மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் செய்கிறார் என்று தகவல் கிடைத்த நிலையில், இது தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது என நினைத்த ஜெயலலிதா, மாவட்ட செயலாளரை மாற்ற நினைத்தார்.

அந்த நேரத்தில் நால்வரணியை பலமாக கவனித்து தனது செல்வாக்கால் மாவட்ட செயலாளர் பதவியை பெற்ற கவிதா ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை பெற்றார்.

தொடர்ந்து கடந்த வாரம் அவரை, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக, முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். அ.தி.மு.க.வில் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கவிதா ராஜேந்திரன் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுதான் பரிதாபம்.

இதற்கு காரணம், நடந்து முடிந்த கூட்டுறவு சங்க தேர்தலில், பா.ம.க., தி.மு.க., தமிழர் நீதி கட்சி என மாற்றுக்கட்சியினருக்கு பணத்தை வாங்கிக்கொண்டு இயக்குனர், தலைவர் பதவி வழங்கியதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி நெசவாளர் சங்கங்களின் இயக்குனர்களாக, 99 பா.ம.க.வினர் தேர்வாகி உள்ளனர். அதில் சில துணைத் தலைவர்களாகவும், சிலர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில வாரங்களுக்கு தமிழக அரசால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பா.ம.க மாவட்ட துணை செயலாளரான வேலுச்சாமியும் ஒருவர்.

##~~##
அதுமட்டுமல்லாமல் 'இரட்டை இலை சின்னத்தை முடக்கிட' நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அபிடவிட்டில் கையெழுத்து போட்டவர்களில், ஒருவர்தான் இந்த கவிதா ராஜேந்திரன். இந்த புகார்களை எல்லாம் சில தினங்களுக்கு முன், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தை சேர்ந்த அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர், ஜெயலலிதாவை சந்தித்து மனுவாக கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா, என்னையும், கட்சியின் சின்னத்தையும் முடக்க நினைத்தவருக்கு பதவியா என கோபமடைந்தவர், நால்வரணியை கூப்பிட்டு கடுமையாக டோஸ் கொடுத்தாராம். விளைவு பதவி பறிப்பு நடந்ததாம். ஆனால் கோபம் அடங்காத ஜெயலலிதா கவிதாவை கட்சியிலிருந்தே நீக்க உத்தரவிட்டதோடு, கவிதா ராஜேந்திரன் வகிக்கும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவிட்டாராம்.
இதனைத்தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட கவிதா ராஜேந்திரன், தான் வகிக்கும் கூட்டுறவு சங்க பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளாராம்.
சி.ஆனந்தகுமார்


படம்:
எம்.ராமசாமி