Published:Updated:

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

விகடன் விமர்சனக்குழு
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

சென்னை: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பயணச்சீட்டு இயந்திரம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்றும், இந்த செய்தி அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

##~~##
மேலும், அமைச்சருக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செய்தி வெளியிட்ட 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆசிரியர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.