Published:Updated:

கென்யா: இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு மோடி கடிதம்!

விகடன் விமர்சனக்குழு

ஆமதாபாத்: கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் பலர் பலியாகி உள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"நைரோபியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் குறிப்பாக குஜராத்தியர்கள் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். மனிதாபிமான மற்ற இந்த செயலால் இந்திய வம்சாவாளி குடும்பத்தினர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் இந்திய அரசின் உடனடி உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இதேபோன்ற தாக்குதலை நாமும் சந்தித்து இருக்கிறோம். அப்பாவிகளின் வலியும் வேதனையும் நமக்கும் தெரியும் எனவே தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாம் இணைந்து

##~~##
செயல்படுவது அவசியம். கென்யாவில் வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் குஜராத்தியர்கள் வேதனையான தருணத்தில் இருக்கும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.