Published:Updated:

மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!

மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!
மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!
மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!

திருச்சி: திருச்சி வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சியில் வரும் 26ஆம் தேதி இளம்தாமரை மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும்  கலந்து கொள்கிறார்கள்.

இன்னும் மாநாடு நடக்க 2 நாட்களே உள்ள  நிலையில், மோடிக்காக டெல்லி செங்கேட்டை மாதிரியான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. குண்டு துளைக்காத மேடையில் நின்று சிறப்புறையாற்றுகிறார் மோடி.

அதிநவீன காமிராக்கள்

மாநாட்டு திடல் முழுவதும் 4 அதிநவீன காமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு
வருகிறது. அந்த பகுதியில் போலீஸ் நிலையம் அமைத்தும் தீவிர கண்காணிப்பு பணியில் உளவுத்துறை போலீசார்,நுண்ணறிவு பிரிவு போலீசார், திருச்சி மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு நிபுணர்கள் என ஏராளமானோர் அங்கு தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு மாநாட்டு திடலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!

வாகன சோதனை

இந்நிலையில், திருச்சி மாநகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது
என்று கருதி, திருச்சிக்கு வரும் முக்கிய சாலைகளில் தீவிரவாதிகள் மற்றும் கொடுங்குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஊடுருவுகிறார்களா? என்ற கோணத்தில் மாநகர போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி

இது இப்படியிருக்க மோடியின் வருகைக்கு தவ்ஹித் ஹமாத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி, புரட்சிகர  அமைப்புகளான மகஇக, புரட்சிகர இளைஞர்கள் முன்னனி  உள்ளிட்டஇயக்கங்கள் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என அறிவித்துள்ளன.

தொடர்ந்து 22 ஆம் தேதி 'இந்தியாவின் ராஜபக்சேவே திரும்பிப்போ' என புரட்சிகர இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. மறுநாள் காலை  திருச்சி மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் நரேந்திர மோடியின் வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதை கண்டித்து பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆளில்லா விமானம், பலூன் கேமிரா

இந்நிலையில் மாநாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுவதாலும், மோடி கலந்துகொள்ளும் மாநாடு என்பதாலும் ஆளில்லா விமானம், பலூன் கேமிரா போன்றவற்றின் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில், 4 டிஐஜிக்கள்,12 மாவட்ட எஸ்பிக்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட போலீஸார்  ஈடுபட்டுள்ளனர்.

மோடியின் உயிருக்கு குறி : உளவுத் துறை எச்சரிக்கையால் திருச்சியில் பலத்த பாதுகாப்பு!

இவ்வளவு  போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்துவரும் நிலையில்,  மோடியின்  உயிருக்கு  ஆபத்து இருக்கிறது என மத்திய உளவுத்துறை  எச்சரித்துள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம், முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு உளவுத்துறை இதுபோன்ற எச்சரிக்கை விடுவது வழக்கம். ஆனாலும் கூடுதல் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் மாநாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்கிறது திருச்சி மாநகர காவல்துறை.

மாநாடு முடிந்தால்தான் திருச்சி மக்களும், காவல்துறையும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர் அதுவரை திக் திக் நிமிடங்களே..!

-சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.கந்தகுமார்