Published:Updated:

காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார்: நாராயணசாமி நம்பிக்கை!

விகடன் விமர்சனக்குழு
காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார்: நாராயணசாமி நம்பிக்கை!
காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார்: நாராயணசாமி நம்பிக்கை!
காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார்: நாராயணசாமி நம்பிக்கை!

கோவை: “தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என நம்புகிறேன் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

கோவையில் மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் 2வது நாளான இன்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மத்திய அரசு தேர்வு மையம் அமைக்க வேன்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் கோவையிலும் தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பது குறித்து, நீதிமன்ற உத்தரவினை முழுமையாக படித்த பின்னரே விளக்கம் அளிக்கப்படும். ஆதார் அட்டைக்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 40 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்.

##~~##
மேலும், தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவர்கள் மற்றும் இந்திய-இலங்கை அரசுகள் கலந்து கொள்ளும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை சிறையில் உள்ள 59 மீனவர்களை மீட்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் நான், வாசன், ஞானதேசிகன் உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளித்து, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என நம்புகிறேன். பிரதமர் இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார்'' என்றார்.

ச.ஜெ.ரவி