Published:Updated:

சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படங்கள் தயாரிக்க ஜனாதிபதி பிரணாப் வேண்டுகோள்!

சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படங்கள் தயாரிக்க ஜனாதிபதி பிரணாப் வேண்டுகோள்!
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படங்கள் தயாரிக்க ஜனாதிபதி பிரணாப் வேண்டுகோள்!
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படங்கள் தயாரிக்க ஜனாதிபதி பிரணாப் வேண்டுகோள்!

சென்னை: சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என சென்னையில் நடக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

சென்னையில், கடந்த 21ஆம் தேதி இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த விழாவின் இறுதி நாளான இன்று ஜனாபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இதற்காக இன்று மாலை 3.40 மணியளவில் சென்னை வந்த அவரை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து, இன்று (24ஆம் தேதி) மாலை தொடங்கிய இந்திய சினிமா நூறாண்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

மேலும், நடிகர் அமிதாப்பசன், எம்.எஸ்.விஸவநாதன், கே.பாலச்சந்தர், ஸ்ரீதேவி, அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, ரேகா, ஏ.வி.எம்.சரவணன் போன்றோருக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும்போது, ''வரலாற்றை மனிதர்கள் தான் படைக்கின்றனர். இந்தியாவில் முதல் திரைப்படத்தை தயாரித்து சாதனை படைத்தார் தாதாசாகேப். இந்திய திரைத்துறை உலகளாவிய தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை கைக்கொண்டு வளர்ந்து வருகிறது இந்திய திரைத்துறை. உலகின் பெரிய துறைகளில் ஒன்றாக இந்திய திரைத்துறை வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய திரை இசையும் கோடான கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

##~~##
இந்திய திரையுலகில் எம்ஜி.ஆர்., சிவாஜி, நாகிரெட்டி போன்றோர் சாதனை படைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவே திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். அவருக்கு, திரைத்துறையின் முதல் விருதை வழங்கியது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பெரும்பாலான தேசிய திரைப்பட விருதுகளை தென்னிந்திய திரைப்பட தட்டிச்செல்கின்றன. சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்'' என்றார்.