Published:Updated:

முஷாஃபர்நகர் கலவரம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!

முஷாஃபர்நகர்: முஷாஃபர்நகரில் நடந்த கலவரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம், முஷாஃபர்நகரில் நடந்த கலவரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கடந்த 21 ஆம் தேதி மீரட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, உராய் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி முஷாஃபர்நகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

##~~##
இந்நிலையில், சங்கீத் சோம் இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், அதிகபட்சம் 12 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும்.
இதற்கிடையே, தங்கள் கட்சியினரை சமாஜ்வாடி அரசு குறிவைப்பதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவர்களை வழக்குகளில் சிக்க வைப்பதாகவும் பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.