Published:Updated:

தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்!

விகடன் விமர்சனக்குழு
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்!
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்!
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்!

மதுரை: நேற்று கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜாவுக்கு, மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

தனது 50 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டதாக, தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினரான ராஜா மீது, அவரது தாயார் ஒச்சம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை நில அபகரிப்பு வழக்கில் நேற்று கைது செய்தனர்.

##~~##
இதையடுத்து, ராஜா எம்.எல்.ஏ., ஜாமீன் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'தினமும் மதுரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டார்.
செ.சல்மான்