Published:Updated:

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

Published:Updated:

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை
இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை: பிரணாப் முகர்ஜி வேதனை

புதுச்சேரி: உலகளவில் முதல் 200 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லாதது மிகுந்த வேதனை தருகிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி, கண்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்த இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ''புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் சிறந்த கல்வி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. 400க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் 6,100 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பட்டம் பெறுவது முக்கியமான காலகட்டமாகும். அதோடு நின்று விடாமல் தொடர்ந்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. இது மிகுந்த வேதனையைத் தருகிறது. ஆனால் இந்த நிலையை மாற்றிசிறந்த தரத்தை பெறும் தகுதியும், திறமையும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

##~~##
கடந்த 6 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த தட்சிசீலம், நாளந்தா, விக்கிரமஷீலா, வல்லபி, சோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். அப்புகழை நாம் மீண்டும் பெறுவோம். ஆசிரியர் பணி அனைத்துப் பணிகளிலும் சிறந்ததாகும். மாணவர்கள் சந்தேகங்கள் எழுப்பினால் அதற்கு பதிலளிப்பது மிகுந்த மகிழ்வை தரும். மாணவர்களுக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் திகழ வேண்டும். தாங்கள் பெற்ற அறிவை மாணவர்களுக்கு போதிப்பதில் கடமை, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தரமான கல்வியை பெறுவதும் உரிமையாகும். இந்தியாவில் தற்போது 659 பல்கலைக்கழங்கள், 33,000 கல்லூரிகளில் 1.8 கோடி பேர் பயின்று வருகின்றனர். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இது 2.9 கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவ, மாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது. ஒழுக்கம், கடமை உணர்வு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கஷ்டமான சூழலையும் சமாளிக்கலாம்'' என்றார்