உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

##~##

தேர்தலில் வெற்றி பெற்ற நேரத்தில்கூட, இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஜெயலலிதா நடத்தவில்லை. ஓர் ஆண்டு நிறைவுக்கு நடத்தப்பட்ட விழா... ஆடம்​பரத்தின் உச்சம்! 

சட்டசபைக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டபோதே, கொண்​டாட்டம் கோட்டையை உலுக்கும் என்பது புரிந்து விட்டது. போயஸ் கார்டனில் இருந்து கோட்டை வரையிலும் தொண்டர்கள் குவிந்து நின்றார்கள். ஆடல் பா​டல்கள், குதிரைப் படை, வாழை மரத் தோரணங்கள், சீரியல் செட், மிரளவைக்கும் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் என்று வழியெங்கும் ஷங்கர் படத்தின் பிரமாண்டம். 'எங்கள் ஆட்சியில் வரவேற்பு வளைவுகள் வைக்கப்படுவது இல்லை’ என்று, கடந்த வாரம்தான் சட்டசபையில் திருவாய் மலர்ந்திருந்தார் ஜெயலலிதா. அவர் பேச்சைக் கொஞ்சமும் மதிக்காமல், கோட்டை வாயிலில் பிரமாண்ட வளைவு வைத்திருந்தார்கள்.

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

ஜெயலலிதாவை வரவேற்பதில் கட்சிக்​காரர்களை தூக்கிச் சாப்பிட்டார்கள், அதிகாரிகள். தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தமிழ்த்தாய் சிலை கொடுத்து அசத்தினார். 'ஜெயலலிதாவின் உரைகள்’, 'அம்மாவின் அமுத மொழிகள்’, 'ஓராண்டுச் சாதனை குறும்படம் மற்றும் பாடல்’, 'முத்திரை பதிக்கும் சித்திரை மலர்’, ஜெயலலிதாவின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய 'எழிலேடு’ என்று விதவிதமாய் தயாரித்து ஸ்கோர் செய்துகொண்டார் ராஜாராம் ஐ.ஏ.எஸ். இந்த வைபவத்தில் அந்தத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கழற்றிவிடப்பட்டார். பிரஸ் மீட் நடக்கும் அறையில் அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து ஜெயலலிதாவுக்கு ஆள் உயர மாலையைச் சூட்டினார்கள்.

சட்டசபை முழுவதும் மலர்த் தோர​ணங்கள். சபாநாயகர் மற்றும் ஜெய​லலிதா இருக்கைக்கும் சிறப்பு அலங்காரம். சட்டசபை நடவடிக்கையைப் படம் பிடிக்க வழக்கமாக வைக்கப்பட்ட கேமராவைத் தாண்டி, ஜெயலலிதா இருக்கைக்கு நேர்எதிர் மாடத்தில் ஸ்பெஷல் கேமரா ஒன்று முளைத்து இருந்தது.

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

நிகழ்ச்சி நிரலைத் தாண்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விவாதத்​தில் பேசிய எதிர்க்கட்சித்

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

தலைவர்களின் பேச்சில், ஐஸ் மழை. பேரவை விதி 110-ன் கீழ் தொடர் அறிவிப்புகளை வெளி​யிட்டு வருவதை ''இது ஒன் டென்னா? ஒன் டன்னா?'' என்று, சி.பி.எம். சௌந்தரராஜன் சொன்னபோது, குலுங்கி குலுங்கிச் சிரித்தார் ஜெயலலிதா.

தே.மு.தி.க. சார்பில் பேசிய கொறடா சந்திரகுமார் மட்டுமே விமர்சனங்களை முன்வைத்தார். ''பால், பஸ், மின் கட் டணங்களை உயர்த்தி, மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றம் தந்த அரசு'' என்று சாடினார். ஒரு கட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்களை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் ஜெயக்குமார் நீக்க முயன்றபோது, ''இருக்கட்டும்...'' என்று பெருந்தன்மையுடன் ஆமோதித்தார் ஜெயலலிதா. இந்த விவாதம் 15 நிமிட இடைவெளியில் ஜெயா டி.வி-யில்  ஒளிபரப்​பானது. சந்திரகுமார் பேச்சு மட்டும் கட்.

இறுதியாகப் பேசிய ஜெயலலிதா, ''ஆளும் கட்சி கொதிக்கிற சோறு என்றால், எதிர்க்கட்சி அதைப் பதம் பார்க்கிற அகப்பை. சோற்றைப் பதம் பார்க்க அகப்பை பயன்பட வேண்டும். மாறாக சோற்றுப் பானையை உடைக்கும் பணியில் அகப்பை ஈடுபடுமானால், அகப்பையைப் பதம் பார்க்கும் நிலைமைதான் ஏற்படும்'' என்று பஞ்ச் வைத்து முடித்தார்.

நான்கு மணி நேரத்துக்கும், இந்த விவாதம் நடந்ததால், நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று இருந்த 20 மசோதாக்களையும் ஜெட் வேகத்தில் நிறைவேற்றினார்கள்.

முக்கிய நாளிதழ்களில் முன், பின் என்று நான்கு பக்க சாதனை விளம்பரங்களுக்கு மட்டும்

இது ஒன் டென்னா? ஒன் டன்னா?

25 கோடிக்கும் மேல் செலவாம். தமிழகம் மின்வெட்டில் தவிக்கும் வேளையில் கோட்டையும் தலைமைச் செயலகச் சாலையும் பளீர் வெளிச்சத்தில் குளித்​தன.    

கொண்டாட்டம் தேவைதான், கோடி​களைக் கொட்டிய இந்தக் கொண்​டாட்​டம் தேவையா?

- எம். பரக்கத் அலி

படங்கள்: வீ.நாகமணி,

சொ.பாலசுப்பிரமணியன்