வி.எஸ்.மோகன்ராம், மணக்குப்பம்.

எதற்கெடுத்தாலும் விதி எண் 110-ன் கீழ் முதல்வரே அனைத்துத் துறைகளுக்கான அறிவிப்பு களையும் வெளியிடுகிறார் என்றால், அமைச்சர்களின் வேலைதான் என்ன? மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கத்தான் வேண்டுமா?

அவசர, பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றைச் வெளியிட வேண்டு மானால், சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத வகையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வரோ, அமைச்சர்களோ அறிக்கை வாசிக்கலாம். அதன் மீது விவாதம் கிடையாது. சபைக்குச் செய்ய வேண்டிய ஓர் அறிவிப்பு அவ்வளவுதான். ஆனால், எல்லா அறிவிப்பு களையும் 110-ன் கீழ் வெளியிடுவது தவறான முன்னுதாரணம். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் அந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால், அதற்கு முதல்வர் அனுமதி மறுத்துவிடுகிறார். எனவே, அந்தத் துறை அமைச்சர்கள் தங்கள் விதியை நொந்து கிடக்கிறார்கள். அமைச்சர்களின் வேலைதான் என்ன என்று கேட்டு இருக்கிறீர்கள். முதல்வர் அறிவிக்கும்போது மேஜையைத் தட்டுகிறார்கள் அல்லவா? அதுதான்!

பி.எஸ்.பூவராகவன், படியூர்.

ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகிய மூவருக்கும் என்ன ஒற்றுமை?

பிரதமர் நாற்காலியை விட முதல்வர் நாற்காலி அனைத்து அதிகாரங்களையும் கொண்டது என்று நினைப்பவர்கள்!

எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

ஆ.ராசாவை, சசிகலா குடும்பத்து ராவணனுடன், கருணாநிதி ஒப்பிட்டது சரியா?

கருணாநிதியின் ஒப்பீடு சரியானதுதான். நல்லவரோடு ஒப்பிட்டு இருந்தால்தானே தவறு?

போடி. எஸ்.சையது முகமது, சென்னை-93.

தி.மு.க-வில் இருந்து விலகப் போகிறாராமே வக்கீல் ஜோதி?

ஜெயலலிதாவிடம் இருந்து விலகி வந்துவிட்டாரே தவிர, அவரால் தி.மு.க-வில் ஒட்ட முடியவில்லை. மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாக தி.மு.க. நிர்வாகக் கூட்டங்களில் அவர் உடைத்தார். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கூட அவருக்கும் தயாநிதி மாற னுக்கும் பிரச்னை ஏற்பட்டது. எனவே, தி.மு.க-வில் 'சும்மா’தான் இருந்தார்.

சசிகலாவுக்கு கல்தா தரப்பட்ட உடன், ஜோதிக்கு தூது அனுப்பியது கார்டன். அப்போது, 'வரமாட் டேன்’ என்று மறுத்து விட்டார். 'உங்களுக்குத் தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்கி விடுவோம்’ என்று மிரட்டிப் பார்த்தார்கள். அதற்கும் ஜோதி மடங்கவில்லை. சசிகலா மீண்டும் கார்ட னுக்குள் வந்துவிட்டதால், இப்போது அ.தி.மு.க-வின் கதவு மூடப்பட்டு விட்டது. இப்போது ஜோதி... தனியே தன்னந்தனியே!

எஸ்.ராஜகோபாலன், சென்னை-17.

தனது திரைப்பட வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறாரா வடிவேலு?

புதிய பாய்ச்சலுக்குத் தயாராகும் வண்ணம், படங்களை மீண்டும் தேர்வு செய்யத் தொடங்கி விட்டார். 'தேர்தல் பிரசாரத்துக்குப் போனது மாபெரும் தவறு’ என்பதை உணர்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். 'அதை’ ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டாராம் வடிவேலு!

ரேவதிப்ரியன், ஈரோடு.

பலரும் புதுக்கோட்டையில் போட்டியிடத் தயங்கிய நேரத்தில், துணிந்து விஜயகாந்த் களம் இறங்கி உள்ளாரே?

விஜயகாந்த் எடுத்த முடிவு சரியானது. அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக வாங்குவதற்கு அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

சி.எல்.சண்முகநாதன், கோயம்புத்தூர்-25.

நாடாளுமன்றத்தின் 60 ஆண்டு வரலாறு குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, தலைசிறந்த 10 சொற்பொழிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் நேரு, அம்பேத்கர், ராதாகிருஷ்ண னுக்கு இணையாக அண்ணாவின் பேச்சையும் சுட்டிக்காட்டி உள்ளதே?

'திராவிட இனத்தின் பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன்’ என்று தொடங்கும் அண்ணாவின் மாநிலங்கள்அவைப் பேச்சுக்குப் பிறகுதான், தமிழ்நாட்டின் மீது வட இந்தியத் தலைவர்களுக்கு உண்மையிலேயே மரியாதை ஏற்பட்டது. நிலப்பரப்பால் நாம் டெல்லிக்குத் தூரத்தில் இருந் தோம் என்பது மட்டும் அல்ல... சிந்தனையின் அடிப்படையிலும் வேறுபட்டே இருந்தோம். தென் இந்தியர்கள் என்றாலே பிரிவினைவாதிகள் என்று வட இந்தியத் தலைவர்கள் நினைத்தார்கள். கனிவான முகத்தால், குணத்தால், சொற்களால் அவர்கள் அனைவரையும் அண்ணா ஈர்த்தார். இந்தி மீது மிக அதீதப் பாசம் வைத்திருந்த வாஜ்பாய், அண்ணாவின் பேச்சால் கவரப்பட்டு தன்னுடைய சிந்தனையை மாற்றிக்கொண்டதாகவும் சொல்வார்கள். எனவே, அண்ணாவின் பேச்சு இடம் பெற்றது நியாயமானதுதான்!

ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர் ( திருப்பூர்).

அ.தி.மு.க-வுக்கு மாற்று சக்தி எது?

அ.தி.மு.க-வுக்கு மட்டும் அல்ல, எந்த ஓர் ஆளும் கட்சியையும் மாற்றும் திறன் படைத்தது மக்கள் சக்திதான். 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களைப் படி’ என்று உழைக்கும் கட்சிகள்தான் மாற்று சக்தியாக மலர முடியும்!

பொன்விழி, அன்னூர்.

இந்த வயதிலும் கருணாநிதியின் அன்றாட நிகழ்வுகள் என்ன?

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு படித்தாரோ, அதே அளவுக்கு இன்றும் படிக்கிறார். தினமும் எழுதுகிறார். நிர்வாகிகள் சந்திப்பும் தொடர்கிறது. வயது ஒரு பிரச்னையாக அவருக்கு இல்லை. குடும்ப யுத்தம் இல்லை என்றால், இன்னும் உற்சாகமாகவே இயங்குவார்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

எம்.நடராஜனால் ஆட்சிக்கும் கட்சிக்கும் ஆபத்து வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பாவம். அவரது ஜாமீனை ரத்து செய்யத் தூண்டுவது போன்ற கேள்வியை யாரும் கேட்க வேண்டாமே!

ந.சேதுராமன், கொடுமுடி.

தி.மு.க. உடையாமல், பெரியார் தலை மையிலேயே இருந்திருந்தால், தமிழகம் இன்னும் அதிகமாக வளர்ச்சி அடைந்து இருக்குமா?

கட்சிகள் உடையக் கூடாது என்பது இயங்கியல் யதார்த்தத்துக்கு முரண். அண்ணா அந்தக் காரியத்தைச் செய்ய வில்லை என்றால், இன்னொருவர் வந்து செய்திருப்பார். பிரிந்தவர்கள் ஒன்று சேரத்தானே செய்தார்கள். 'அண்ணா பிரிந்து சென்றதால்தான், நம்முடைய பல லட்சியங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது’ என்று பெரியாரிஸ்ட்டுகள் சொல்வார்கள். எனவே, ஒரு நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கிறது என்பது பிரச்னையே இல்லை. எத்தகைய கட்சிகள் இருக்கின்றன என்பதுதான் முக்கியம்!

ஆர்.முத்துக்குமார், அருப்புக்கோட்டை

ஆ.ராசா விடுதலை ஆகி விட்டாரே?

ஜாமீனில் வெளியே விட்டிருக்கிறார்கள். எனவே சரியான வார்த்தையைக் குறிப்பிடவும்!