உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

எஸ்.வசந்தகுமார், திருச்சி.

கழுகார் பதில்கள்

காங்கிரஸுக்கு கக்கன் என்று சொல்வதைப் போல தி.மு.க.வில் யாராவது இருந்துள்ளார்களா?

தி.மு.க. தொண்டன் மறக்கக் கூடாத பெயர்களில் ஒன்று ஏ.ஜி.! அதாவது ஏ.கோவிந்தசாமி!

கழுகார் பதில்கள்
##~##

ஆட்சியைப் பிடித்த முதலாவது காலகட்டத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சர் பதவிக்கு அவரே இலக்கணம் என்பார்கள். அமைச்சராக இருந்தபோதே இறந்தார். அப்போது தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம், 'முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்புத் தாருங்கள்’ என்பதை வரம் மாதிரி கேட்டு வாங்கிக்கொண்டார். அவர் எந்தக் கெட்ட பெயரையும் கட்சிக்கு வைத்துவிட்டுச் செல்ல வில்லை. 'நான் அப்பழுக்கற்றவன் என்பதை ஒரு குழந்தையைப் போலக் காட்டிக்கொண்டார் ஏ.ஜி.’ என்று சொல்வார் என்.வி.நடராஜன். அத்தகைய வழித்தடத்து பிரமுகர்கள் தி.மு.க.வில் குறைந்து போனதால்தான், நீங்கள் இத்தகைய கேள்வி கேட்க வேண்டிய நிலை!

ஏ.ஜி.யைப் பற்றிய கூடுதல் தகவல்: தி.மு.க.வின் சின்னமான 'உதயசூரியன்’, ஏ.ஜி. தனது கட்சிச் சின்னமாக வைத்திருந்ததுதான். தன்னை மட்டும் அல்ல, தன் சின்னத்தையும் தி.மு.க.வுக்குத் தாரை வார்த்தவர் அவர்!

 விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கழுகார் பதில்கள்

முதுகில் குத்துவதற்கும் நெஞ்சில் குத்துவதற்கும் என்ன வேறுபாடு?

'என்னுடைய நெஞ்சில் குத்துகிறார்கள்’ என்று ப.சிதம்பரம் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்கள். ஒரு வேட்பாளர் மீது நம்பிக்கை வைத்து முத்திரை குத்துவது வாக்காளர்களின் வழக்கம். ஆனால், அந்த நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்பட்டு வாக்காளனின் முதுகில் குத்துவது அரசியல்வாதிகளின் பழக்கம். மற்றபடி, ப.சிதம்பரம் சொல்வது எல்லாம் வசனங்கள்தான்!

 எம்.செல்லையா, சாத்தூர்.

கழுகார் பதில்கள்

'என் மீதான தாக்குதல், இந்து மதத்தின் மீதான தாக்குதல் ஆகும்’ என்று, நித்தியானந்தா சொல்கிறாரே?

யாரையாவது குணப்படுத்தி னால், அது தன்னுடைய சாதனை, தனிப்பட்ட திறமை என்று சொல்வதும்... தன்னை யாராவது குற்றம் சாட்டினால் மட்டும் அது இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்று சொல்வதும் நித்தியானந்தா பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் ஞானத்துக்கு அழகு அல்ல!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

ஆ.ராசாவின் ஜாமீன் அனுமதியை, ஸ்பெக்ட்ரம் வழக்கின் முடிவுக்கான முன்னோட்டம் என்று கருதலாமா?

ஜாமீன் என்பது சட்டத்தின் பார்வையில் குற்றம் சாட்டப்பட்டவர் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சலுகை. ஆ.ராசா, அதைப் பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவுதான்.

இதை, ஸ்பெக்ட்ரம் வழக்கின் முடிவுக்கான முன் னோட்டம் என்று சொல்ல முடியாது. அப்படி ஆகிவிடவும் கூடாது. சில தனிமனிதர்களைக் காப்பாற்ற முயற்சித்தால், கட்சியே மூழ்கிப்போகும் என்பதை டெல்லி காங்கிரஸ் உணர்ந்தாக வேண்டும்.

 என்.ராம், சேலையூர்.

கழுகார் பதில்கள்

ஜூ.வி. - தகவல் கூறும் பத்திரிகையா? வம்பு சொல்லும் பத்திரிகையா? எச்சரிக்கும் பத்திரிகையா?

தகவலைத் தருகிறோம். அது சிலருக்கு வம்பாகத் தெரிகிறது. உண்மையில் எமது பணி, எச்சரிக்கை செய்வதுதான்.

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்

'அ.தி.மு.க. அரசு எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று, முதல்வர் கூறி உள்ளாரே?

ஏற்க வேண்டாம்... கேட்கவாவது வேண்டாமா? ஜெயலலிதாவுக்கு அவர்கள் சொல்வதைக் கேட்கவே பிடிக்கவில்லை. தமிழக சட்டசபை நிகழ்வுகள் அப்படித்தான் இருக் கின்றன!

 கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.

கழுகார் பதில்கள்

ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று, சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளாரே?

உயிருக்கு ஆபத்து என்று, ஓர் ஆண்டாகவே சுவாமி சொல்லி வருகிறார். யாரால் ஆபத்து என் பதையும் சொல்ல வேண்டும்!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

இந்துக் கடவுளான காளியின் பெயரில் அமெரிக்காவில் பீர் விற்கப்பட்டதாமே?

டாஸ்மாக் வருவதற்கு முன், இங்கு என்ன நடந்ததாம்? ஆண்டவர் ஒயின்ஸ், கடவுள் ஒயின்ஸ், லட்சுமி ஒயின்ஸ், சரஸ்வதி ஒயின்ஸ், அய்யனார் ஒயின்ஸ் என்று வைத்திருந்தவர்கள்தானே நாம்? டாஸ்மாக் வந்ததால், தமிழ்நாட்டில் கடவுள்கள்தான் காப்பாற்றப்பட்டார்கள்!

 அம்மா பிரியன், மதுரை-9.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

நாடாளுமன்றத்தில், தன் மகனின் அறிக்கையை ப.சிதம்பரம் வாசித்தது சரியா?

தவறு! நாடாளுமன்றத்துக்குள் சென்று அறிக்கை கொடுக்க முடியாதவர்கள் எல்லாம், யாரிடமாவது கொடுத்துவிட்டு வாசிக்கச் சொன்னால் என்ன ஆகும்?

'என்னுடைய மகனுக்கு எந்தப் பங்கும் கிடையாது’ என்ற உத்தரவாதத்தை ப.சி.தான் பகிரங்கமாக வழங்கி இருக்க வேண்டும். 'என் மகன் சொல்லி விட்டாரே’ என்பது தப்பித்தல்வாதம். இப்படி ஒரு கடிதத்தை வாசிக்க இருக்கிறேன் என்று சபாநாயகர் மீரா குமாரிடம் ப.சி. அனுமதி வாங்கினாரா எனத் தெரியவில்லை. அனுமதித்து இருந்தால், சபாநாயகரின் முடிவும் தவறானதுதான்!

 பி.எஸ்.பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்

'பொதுவுடைமையை திசை எட்டும் சேர்ப் போம்’ என்கிறாரே தா.பாண்டியன்?

புதுக்கோட்டையைப் பார்த்தே பயந்தவர், எப்படி திசை எட்டும் சேர்ப்பார்?

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்

ஓர் அரசியல் தலைவரை ஒரு நிருபர் பொது இடத்தில் கேள்வி கேட்டால், 'நீங்கள் எந்தப் பத்திரிகை?’ என்று கேள்வி கேட்பது என்ன மாதிரியான மனோபாவம்?

நீங்கள் பைக்கிலோ காரிலோ சென்றுகொண்டு இருக்கிறீர்கள். ஹாரன் அடித்ததைக் கேட்டதும் விலகாமல் சிலர், ஹாரன் அடிப்பது யார் என்று திரும்பிப் பார்த்த பிறகுதான் விலகுவார்கள். அத்தகைய மனோபாவம் உள்ளவர்கள் இத்தகைய தலைவர்கள்!

கழுகார் பதில்கள்