உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

பொது வாக்கெடுப்பு.. புதிய ஆதரவு!

மெரினா பிரகடனம்

##~##

ர்ப்பரிக்கும் கூச்சல், ஆரவாரப் பேச்சு எதுவும் இல்லாமல் ஆனால், அர்த்தம் உள்ளதாக நடந்து முடிந்துள்ளது, மே 20-ம் தேதி மெரினா ஒன்றுகூடல். 

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவரு மான ராம்விலாஸ் பாஸ்வான்.  வைகோ, பழ.நெடு மாறன்,  கொளத்தூர் மணி, காசி.ஆனந்தன், வீர. சந்தானம் என, ஏராளமானோர் திரண்டு இருந்தனர். பெரியார் தி.க. - 'மே 17’ இயக்கத்தின் மெழுகுவத்தி அஞ்சலிக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக, கண்ணகி சிலைக்கு அருகில் தற்காலி​​கமாக அமைக்கப்பட்டு இருந்த அஞ்சலித் தூணில் சுடர் ஏற்றினர். அப்போது, திடீரென வந்​த ம.நடராசன், தலைவர்களுக்குத் தரப்பட்ட மலர்களை எடுத்துத் தூவிவிட்டு, தலைவர்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

அஞ்சலி முடிந்ததும் மணலில் உட்கார்ந்த பாஸ்வான், பளீர் பொளேர் எனக் கருத்துகளை முன் வைத்தார்.

பொது வாக்கெடுப்பு.. புதிய ஆதரவு!

''ஒரு காலத்தில், இலங்கையைத் தமிழர்கள் ஆட்சி செய்​தனர். பிரிட்டன் ஆட்சி அகன்றதும் தமிழ் மக்கள் அங்கு இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டனர். அமைதி வழியிலே ஈழத்துக் காந்தி (தந்தை செல்வா) தலைமையில் தமிழர்கள் போராடினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டு, தனித்தமிழ் ஈழமே தீர்வு என, 1977 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவையும் பெற்றார்கள். 80 சதவிகிதத் தமிழ் மக்கள், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட்டன. பண்டாரநாயக முதல் சேனநாயக்க வரை இதுதான் நடந்தது. பிறகு தான், ஆயுதப் போராட்டம் தொடங்கியது. 2009 இறுதிப் போரில், 1.46 லட்சம் தமிழர்கள் கொல்லப்​பட்டனர். எங்களைப் பொறுத்தவரை, அந்த இனப்படு​கொலைக்​குக் காரணமான ராஜபக்சே அரசு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தபட்டு, போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும். மேலும், இலங்கையில் (ஈழத்) தமிழ் மக்களுக்குத் தனியான, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசாங்கம் அமைத்துத் தருவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 77-ம் ஆண்டிலேயே அந்த மக்கள் தங்களின் விருப்பத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். அவர்களாகவே முடிவெடுக்க விடவேண்டும்'' என, வரலாற்றை சுருக்கமாகச் சொன்னார்.

பாஸ்வான் உரிமைக் குரல் கொடுத்ததை எண்ணி சிலிர்த்தார்கள், ஒன்றுகூடலுக்கு வந்திருந்த தமிழின உணர்வாளர்கள். இவரைப் பின்பற்றி வட இந்தியா முழுவதும் வழிமொழிந்தால், ஈழத்தின் நியாயத்துக்கான ஆதரவை யாராலும் தடுக்க முடியாது.

- இரா. தமிழ்க்கனல்,

படம்: சொ. பாலசுப்ரமணியன்