Published:Updated:

ஆழியாறு அணை 3ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆழியாறு அணை 3ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!
ஆழியாறு அணை 3ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!

ஆழியாறு அணை 3ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: பாசன சாகுபடிக்காக ஆழியாறு அணையில் இருந்து வரும் 3ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

ஆழியாறு அணை 3ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை பாசன அமைப்பின்கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

##~~##
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ஆகிய கால்வாய்களின் மூலம் பாசனத்திற்காக  3.10.2013 முதல்  தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு