Published:Updated:

மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் வைகோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் வைகோ
மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் வைகோ

மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் வைகோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி: தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற மாயை நிலவுகிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நேற்று மாலை தொடங்கினார்.

மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் வைகோ

கிராமம், கிராமமாக மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை நடத்துவது என,  அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நேற்று மாலை 5 மணிக்கு தன்  பயணத்தை வைகோ தொடங்கினார். நடைபயணத்திற்கு முன் வைகோ பேசும்போது, ‘‘தன் பொருநை நதியாம் தாமிரபரணி கங்கையை விட பழமியானது, புனிதமானது. அத்தகைய தாமிரபரணி ஆற்றங்கரையோரம் எங்கள் மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளோம்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சியினரும் தமிழக ஆறுகளில் உள்ள மணலை கொள்ளையடுத்து விட்டனர். தற்பொழுது, கடற்கரையோரம் உள்ள மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் வகையில் தாது மணல் கொள்ளை அதிமாக நடந்துள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாகவே மக்களுக்காகப் போராடிய தகுதியோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

பெரியார் சொன்ன பண்பாட்டை மதித்து எங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. கர்நாடகம், கேரள அரசுகள் தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுத்த போதும், உரிமையோடு போராடியது ம.தி.மு.க.தான். காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டபோது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அனுமதி வாங்கி கொடுத்ததும் ம.தி.மு.க.தான்.

காமராஜர், அண்ணா காலத்தில் தமிழகத்தில் மது இல்லை, ஆனால், தற்பொழுது தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே மதுவுக்கு அடிமையாகும் அவல நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.

இலங்கைப் போர் குற்றம் குறித்து நீதி விசாரணை கேட்டு நாம் போராடும் சமயத்திலும்கூட, இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா ஆதரவு அளிக்கிறது. மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் காங்கிரஸ் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

##~~##
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது, என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து லல்லுபிரசாத்தை காப்பாற்ற, மத்திய அமைச்சரவையில் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை, ராகுல்காந்தி எதிர்த்தது அரசியல் சூழ்ச்சியாகும்.

நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அமைச்சரவை என பல நிலைகளில் பரசீலிக்கப்பட்ட பின், இந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்குச் செல்கிறது. இந்நிலையில், ராகுல் எதிர்க்க என்ன காரணம்? தாயும் மகனும் ஆடும் நாடகத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ம.தி.மு.க. புறப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற மாயை நிலவுகிறது. சாத்தியமில்லாததை மாற்றிக் காட்டுவதே மாற்றம் ஆகும். அத்தகைய மாற்றத்தை நிகழ்த்திக்காட்டவே ஆதரவு கேட்டு மக்களை நேரடியாகச் சந்திக்கும் முயற்சியே இந்த மறுமலர்ச்சி பயணம். நேர்மை, உழைப்பு, நாணயத்துடன் வாய்ப்பு கேட்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு தாருங்கள்’’ என்று பேசினார்.

இ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு