Published:Updated:

லாலு பிரசாத் பதவி பறிப்பு எப்போது?: சபாநாயகர் மீரா குமார் பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லாலு பிரசாத் பதவி பறிப்பு எப்போது?: சபாநாயகர் மீரா குமார் பதில்
லாலு பிரசாத் பதவி பறிப்பு எப்போது?: சபாநாயகர் மீரா குமார் பதில்

லாலு பிரசாத் பதவி பறிப்பு எப்போது?: சபாநாயகர் மீரா குமார் பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லாலு பிரசாத் பதவி பறிப்பு எப்போது?: சபாநாயகர் மீரா குமார் பதில்

கோவை: தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பிறகு தான், லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட், குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனே பதவி இழப்பர் என்றும், அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தர விட்டது.

பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்பட 45 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற 3-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை வந்த நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாரிடம், லாலு பிரசாத் யாதவ் எம்.பி. பதவி பறிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்ற நீதிமன்ற தீர்ப்பை கோவையில் வந்திறங்கிய பிறகு தான் அறிந்தேன். ஆனால் அவர்களுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகியோருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னரே இது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு