Published:Updated:

ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத்துக்கு 4 ஆண்டு சிறை: பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத்துக்கு 4 ஆண்டு சிறை: பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி!
ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத்துக்கு 4 ஆண்டு சிறை: பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி!

ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத்துக்கு 4 ஆண்டு சிறை: பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரஷீத்துக்கு 4 ஆண்டு சிறை: பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி!

புதுடெல்லி: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான ரஷீத் மசூத்திற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் எம்.பி பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதியானார்.

வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ரஷீத் மசூத் மீது, 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ரஷீத் மசூத் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை விவரத்தை அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

##~~##
அதன்படி, இன்று தீர்ப்பளித்த டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம், ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ரஷீத் மசூத், எம்.பி. பதவியை இழக்கப்போகிற முதல் அரசியல்வாதியானார். ரஷீத் மசூத் மாநிலங்களவை எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, குற்ற வழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு