Published:Updated:

பிரதமரை அவமதித்தது ராகுல்தான்; நாங்கள் அல்ல: சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 பிரதமரை அவமதித்தது ராகுல்தான்; நாங்கள் அல்ல: சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி!
பிரதமரை அவமதித்தது ராகுல்தான்; நாங்கள் அல்ல: சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி!

பிரதமரை அவமதித்தது ராகுல்தான்; நாங்கள் அல்ல: சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 பிரதமரை அவமதித்தது ராகுல்தான்; நாங்கள் அல்ல: சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி!

புதுடெல்லி: அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதித்தது ராகுலா காந்திதானே தவிர, பா.ஜனதா அல்ல என அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமரை பா.ஜனதா கேலி செய்வதாகவும், ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு உள்ளது என்பதை அக்கட்சி உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் சோனியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமருக்குண்டான மரியாதை குறித்து சோனியா காந்திக்கு ஏதாவது அக்கறை இருக்குமானால், அவர் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் அல்லது மன்னிப்பு கோருமாறு சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்தான் பிரதமரை அவமதித்தார்" என்றார்.

##~~##
முன்னதாக 2 ஆண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் சிறைத்தண்டனை பெறும் எம்.பி. அல்லது எம்.பி.க்கள், தண்டனை விதிக்கப்பட்ட அன்றே பதவி இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இழப்பதை தடுப்பதற்காக, மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்து, அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில் அந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்றும், அதனை கிழித்து குப்பைக்கூடையில் போட வேண்டும் என்றும் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமருக்கு சிறிதேனும் சுயமரியாதை இருந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு