பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

பொன்விழி (எ) பி.செந்தில்குமார், அன்னூர்.

கழுகார் பதில்கள்

  எம்.ஜி.ஆர். - பிரபாகரன் முதல் சந்திப்பு பற்றி சொல்ல முடியுமா?

அன்றைக்கு, உளவுத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த அலெக்சாண்டர் மூலமாக பிரபா கரனைச் சந்திக்க வேண்டும் என்று, பாலசிங் கத்துக்குத் தகவல் அனுப்பினார் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆனால், பிரபாகரன் சந்திக்கச் சம்மதிக்காமல் பாலசிங்கம், பேபி, கர்னல் சங்கர், மு.நித்தியானந்தம் ஆகிய நால்வரையும் அனுப்பினார். நீண்டநேர விவாதத்துக்குப் பிறகு, பணஉதவி செய்ய எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டார். 'இரண்டு கோடி தேவை’ என்றார் சங்கர். 'நாளைக்கே வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார் முதல்வர்.

கழுகார் பதில்கள்
##~##

மறுநாள், ராமாவரம் தோட்டத்துக்கு பால சிங்கம் சென்றார். ரகு என்ற போராளி வண்டி ஓட்டினார். 10 பெட்டிகள் அதில் ஏற்றப் பட்டன. ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கார், ராமாவரத்தில் இருந்து பிரபாகரன் தங்கி இருந்த திருவான்மியூர் வந்தது. இந்த மாபெரும் உதவிக்கு நன்றி சொல்லவே முதன் முதலாக எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் பிரபாகரன். 'விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்’ என்று எம்.ஜி.ஆருக்கு, பாலசிங்கம் பட்டம் கொடுத்ததும் இதனால் தான்!

 ர.ஷண்முகப்பிரியா, திருப்பூர்-5.

கழுகார் பதில்கள்

பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்த அனுபவசாலி ஒருவரை ஏன் ஜனாதிபதி ஆக்கக் கூடாது?

முத்திரை பதித்தவர்கள், வெறும் முத்திரையாக (ரப்பர் ஸ்டாம்ப்)  இருக்கச் சம்மதிப்பார்களா என்ன?

 செ.அ.ஷாதலி, கோனுழாம் பள்ளம்.

கழுகார் பதில்கள்

  ஊழலின் முன்னோடி யார்?

சில கிருமிகள் எப்படி உருவானது என்று கண்டுபிடிக்க முடியாது. அதில் ஒன்று... ஊழல்.

'திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊழல் உருவானது’ என்று, சிலர் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் ஊழல் உண்டு. ஆட்சியைப் பிடிப்பதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் சுயராஜ்ய நிதியில் நடந்த மோசடிகளைச் சொல்லும் வரலாறும் உண்டு. எனவே, 'ஊழல்’ எந்தத் தனிப் பட்ட இயக்கத்தின் பிரத்யேக சொத்து அல்ல... அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது.

 இ.சிகாமணி, அத்தனூர்.

கழுகார் பதில்கள்

  'ஜெயலலிதாவுக்குத் தேர்தல் அறிக்கை கூட எழுதத் தெரியாது’ என்கிறாரே எம்.நடராஜன்?

ஜெயலலிதா தமிழிலும், அதைவிடச் சிறப்பாக ஆங்கிலத்திலும் எழுதக் கூடியவர்.

பொதுவாகத் தேர்தல் அறிக்கைகள், பலரது சிந்தனைகளின் தொகுப்புதான். எனவே, எல்லா வற்றையும் ஜெயலலிதாவே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், 'நான் எழுதினேன்’ என்று, எம்.நடராஜன் சொன்னதற்கு, ஜெயலலிதாதான் பதில் சொல்ல வேண்டும்.

 போடி. எஸ்.சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்

  வீரப்பன் சமாதியைத் தோண்டியது யார்?

கழுகார் பதில்கள்

வீரப்பன் இறந்தது எப்படி என்ற மர்மமே இதுவரை விலகவில்லையே?

 ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்

  பாடப் புத்தகங்களில் அரசியல் கருத்துக்களைத் திணிப்பது சரியா?

அரசியல் என்பதற்காக நல்ல செய்திகளைப் புறக்கணிப்பதும் தவறுதான். பொதுவாக, பேதங்களை உருவாக்கும் கருத்துக்கள் பாடப் புத்தகங்களில் இருக்கக் கூடாது. அது, பிஞ்சு நெஞ்சில் நஞ்சு பாய்ச்சுவதற்குச் சமம்.

 கலைஞர் ப்ரியா, வேலூர் (நாமக்கல்).

கழுகார் பதில்கள்

  சங்மா மீது ஜெ. பாசமழை பொழிவது ஏன்?

இருவருமே சோனியா மீது கல் மழை பொழிந்தவர்கள். அதனாலேயே கை கோத்துள்ளார்கள். 'சோனியாவை அன்னியர்’ என்று, பிரசாரம் செய்ததன் மூலமாக, சொந்தம் ஆனவர்கள்!

 விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கழுகார் பதில்கள்

  'கருணாநிதி எனது தந்தை’ என்கிறாரே மதுரை ஆதீனம்?

கருணாநிதியை தந்தை என்பார். ஜெயலலிதாவை சகோதரி என்பார். மதுரை ஆதீனம் மனம் 'எதற்காகவோ’ அலை பாய்கிறது!

 ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்

  'மணல் கொள்ளையரை, இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்’ என்கிறாரே தமிழக முதல்வர்?

கழுகார் பதில்கள்

இரும்புக்கரம் எதற்கு? அடக்கினாலே போதும்!

மணல் விவகாரத்தில் 2001-06, 2006-11, 2011 முதல்.... ஆகிய மூன்று காலகட்டங்களில் கோவையைச் சார்ந்த ஒரு பிரமுகரின் ரோல் என்ன என்பதை பகிரங்கமாக முதல்வர் சொல்லத் தயாரா? இந்தக் கணக்கு - வழக்குகளின் தன்மை என்ன? ஒவ்வோர் ஆற்றுப்படுகையில் இருந்தும் எடுக்கப்படும் மணல் ஒரு யூனிட் விலை என்ன என்று சொல்ல முடியுமா? குறிப்பிட்ட விலைக்கு மேல் யாரும் பணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்க முடியுமா? மணல் திருட்டு என்று அதை மலினப்படுத்தக் கூடாது. கனிம வளம் கொள்ளை அடிக்கப்படுகிறது. சொந்த உபயோகத்துக்காக மாட்டு வண்டியில் எடுத்துச் செல்பவர்களைப் பிடித்துக் கணக்குக் காட்டினால் போதுமா?

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு