Published:Updated:

மே.வ: போராட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு... பாஜக குற்றச்சாட்டை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ்!

எம்.பி சாந்தனு சென் - பா.ஜ.க மாவட்டத் தலைவர் சுகுமார் ராய்

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இரண்டு பா.ஜ.க-வினர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் சிலரின் இடங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ சோதனை நடத்தியது. அதனால், ஊழலில் ஈடுபட்ட மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களைக் கைதுசெய்யக் கோரி, கூச் பெஹாரின் சிடல்குச்சியில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது, ​​நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இரண்டு பா.ஜ.க தொண்டர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, பேரணியின்போது இருந்த பாதுகாப்பு காவலர்களால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் இயல்புநிலை திரும்பியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பா.ஜ.க மாவட்டத் தலைவர் சுகுமார் ராய், ``கூச் பெஹார், சிட்டால்குச்சி பகுதியில் நாங்கள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினோம். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசத் தொடங்கினர், பின்னர் குண்டுகளை வீசத் தொடங்கினர். இதன் விளைவாக. இரண்டு பா.ஜ.க தொண்டர்கள் காயமடைந்திருக்கின்றனர்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்
ட்விட்டர்

பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென், "பா.ஜ.க-வின் போராட்டக்காரர்களைத் தாக்கவேண்டிய அவசியம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே குண்டுவைத்து அழித்துக்கொள்ளும் ஒரு சுய அழிவு கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினார்.