Published:Updated:

அரை மணி நேர ஜெ. பதவியேற்புக்கு 2 கோடி ரூபாய் செலவு!

ஜெ. பதவியேற்பு
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. பதவியேற்பு

வி.ஐ.பி. டாய்லெட்... ஏசி... எல்.இ.டி திரைகள்... சி.சி.டிவி...

அரை மணி நேர ஜெ. பதவியேற்புக்கு 2 கோடி ரூபாய் செலவு!

வி.ஐ.பி. டாய்லெட்... ஏசி... எல்.இ.டி திரைகள்... சி.சி.டிவி...

Published:Updated:
ஜெ. பதவியேற்பு
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. பதவியேற்பு
மே 23-ம் தேதி, தமிழக அரசியலில் முக்கியமான தினம். 2015, 2016 ஆண்டுகளில் தலா ஒருமுறை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அந்த இரண்டு பதவியேற்புகளும் மே 23-ம் தேதி நடந்தது செம சென்டிமென்ட்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பால் விடுதலை யானார். முதலமைச்சர் ஆவதற்கான தடை நீங்கியதும், 2015 மே 23-ம் தேதி முதல்வர் ஆனார். அதன் பிறகு 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று, மே 23-ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இந்த இரண்டு அமைச்சரவைப் பதவியேற்புகள் தொடர்பான செலவு ஆவணங்கள், விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தன. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் இரண்டு பதவியேற்புகளும் நடைபெற்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* பதவியேற்பு மேடையில் பேக்ட்ராப், மேடையின் பக்கவாட்டிலும் மேற்புறங்களில் மலர் அலங்காரம், மண்டப நுழைவுவாயிலில் பந்தல், மக்கள் அமர இரும்புத் தகரத்தால் மேற்கூரை ஆகியவற்றுக்காக 2015-ம் ஆண்டில் 17,00,876 ரூபாயும், 2016-ம் ஆண்டில் 15,30,605 ரூபாயும் செலவானது.

அரை மணி நேர ஜெ. பதவியேற்புக்கு 2 கோடி ரூபாய் செலவு!

* மேடையையொட்டியே வி.ஐ.பி பயன்படுத்து வதற்காக மட்டும் டாய்லெட் வசதி உண்டு. அதை பதவியேற்புக்காகப் புதுப்பித்தார்கள். 2015-ம் ஆண்டு வி.ஐ.பி டாய்லெட் புதுப்பித்தல், மண்டபம் உள்ளே பெயின்டிங், வார்னிஷ் அடித்தல், மர வேலைகள் ஆகியவற்றுக்காக 2,40,919 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். இதே பணிகளுக்கு 2016-ம் ஆண்டில் 1,24,424 ரூபாய் செலவானது.

* ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதா ஆகியோர் காரில் வந்து இறங்கும் இடத்தைச் சமப்படுத்தவும் குப்பைகள் அள்ளவும் 2015-ம் ஆண்டில் ஜே.சி.பி இயந்திரத்தை 83,412 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

* பாதுகாப்பு விளக்குகள், மரங்களில் சீரியல் லைட்ஸ் போட்டதற்காக 2015-ம் ஆண்டில் 5,59,784 ரூபாயும், 2016-ம் ஆண்டில் 6,80,230 ரூபாயும் செலவு. ஆனால், இரண்டு முறையும் விழா நடந்தது பகலில்!

* அரங்கத்தினுள் குளிர்சாதன வசதிக்காக 2015-ம் ஆண்டில் 12,99,550 ரூபாயும், 2016-ம் ஆண்டில் 11,21,390 ரூபாயும் செலவிட்டிருக்கிறார்கள்.

அரை மணி நேர ஜெ. பதவியேற்புக்கு 2 கோடி ரூபாய் செலவு!

*அரங்க குளிர்சாதன வசதியோடு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அமரும் மேடையில் தற்காலிக குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டன. இதற்காக 2015-ம் ஆண்டில் செய்யப்பட்ட செலவு 19,83,000 ரூபாய். 2016-ம் ஆண்டில் இது 23,49,400 ரூபாயாக உயர்ந்தது.

* மைக் சவுண்ட் அமைப்புக்காக 2015-ம் ஆண்டில் 4,70,000 ரூபாயும், 2016-ம் ஆண்டில் 5,21,000 ரூபாயும் செலவு.

* சாலையிலும் எம்.ஜி.ஆர் சமாதியிலும் பெரிய எல்.இ.டி திரைகள் அமைத்தற்காக 2015-ம் ஆண்டில் 5,19,000 ரூபாயும், 2016-ம் ஆண்டில் 5,42,000 ரூபாயும் செலவு.

*2016-ம் ஆண்டு பதவியேற்பில் கண்கவர் மலர் ஏற்பாட்டுக்கு 8,48,600 ரூபாயும் மேடையின் முன்பு அலங்காரம் செய்ய 6 லட்சம் ரூபாயும் செலவானது. நேப்பியர் பாலம் முதல் தலைமைச் செயலகம் வரையில் தடுப்புகளுக்காக 3,14,025 ரூபாய் செலவானது.

ஜெயலலிதா மட்டுமே தனியாகப் பதவியேற்றார். அமைச்சர்கள் இரண்டு குழுவாக ஒரே நேரத்தில் பதவியேற்க அரை மணி நேரத்திலேயே விழா முடிந்துபோனது. இதற்குத்தான் மக்கள் வரிப்பணம் 2 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்பட்டது.