Published:Updated:

தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...

தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...

தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...

தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...

Published:Updated:
தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...
தலையங்கம் - கற்றுக் கொடுங்கள் மேதைகளே...

ரிசையில் நின்று வாக்களித்த பாவத்துக்காக, மக்களைத் தொட்டதற்கெல்லாம் வரிசையில் நின்று அல்லாடவைத்து சுகமாக வேடிக்கை பார்க்கிறது மன்மோகன் நடத்தும் மத்திய அரசு. கடந்த ஆட்சியின்போது ஐந்து ஆண்டுகளில் 'உண்டாக்கிக் காட்டிய' விலைவாசி உயர்வு விகிதத்தை, இந்த ஆட்சியின்போது மூன்றே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து... வேதனையிலும் ஒரு சுறுசுறுப்பான சாதனையை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளியவர்கள் எளிதில் வாங்கிவிட முடியாதபடி அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு அநியாயத்துக்கு எதிராகக் குமுறல்கள் வெடித்துக் கிளம்ப... அதைத் திசை திருப்பும் காரியத்தில் தன் திறமையைக் காட்டியுள்ளது இந்த அரசு. ஜெட் வேகத்தில் பெட்ரோலின் விலையை ஏற்றியதைத் தொடர்ந்து எங்கும் கிளம்பிய கொந்தளிப்பை ஒரு நமட்டுச் சிரிப்போடு பார்த்துவிட்டு, 'ஐயோ... எவ்வளவு விலை ஏற்றினாலும் சரி... எப்படியாவது பெட்ரோல் - டீசல் எங்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள், போதும்' என்று அதே மக்களை பெட்ரோல் நிலையங்களின் முன்பு திரளவைத்து, பதறவைத்து வேடிக்கை பார்க்கிறது.

கூட்டணியில் இருந்துகொண்டே   டெல்லியை நோக்கி எதிர்ப்புக் குரல் கொடுக்கும் தி.மு.க-வின் அரசியல் சாமர்த்தியமும் சரி... பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி வருவாயைக் கொஞ்சமும் குறைத்துக்கொள்ளாமல், கண்டன ஆர்ப்பாட்டம் என்று முண்டா தட்டும் அ.தி.மு.க-வின் காரியக்கார வீரமும் சரி... மக்களின் வலியைத் துளியும் குறைக்காது. மாறாக, எரிகிற தீயில் எண்ணெயாக அரங்கேறும்  இந்தக் கபட நாடகங்கள் மேலும் அவர்களை எரிச்சலில் துடிக்க வைக்கும்.

அரிசி - பருப்பு - காய்கறியில் தொடங்கி, ஆட்டோ கட்டணம் வரை ஒரு பக்கம் உயர்ந்துகொண்டேபோக... கணினி, அலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகிய மின்னணுச் சாதனங்களின் விலை குறைந்திருக்கிறதாம் இந்த ஆட்சியில். இதே மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்ட விவரம்தான் இது.

ஐயா பொருளாதார மேதைகளே... டி.வி-யை வைத்து உலை பொங்கி, செல்போனைக் கொண்டு சாம்பார் செய்து, கம்ப்யூட்டர் சிப்ஸைத் தொட்டுக்காண்டு சாப்பிட எப்போது எங்களுக்குக் கற்றுக்கொடுப்பீர்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism