Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுவில் எனிதிங் ஸ்பெஷல்?

கழுகார் பதில்கள்
##~##

கோஷ்டிப் பூசல்தான். நிதின் கட்காரி, தனது பேச்சைக் கேட்பது இல்லை என்ற கோபம் அத்வானிக்கு இருக்கிறது. அடுத்த தலைவர் பதவிக்குக் காத்திருக்கும் சுஷ்மா ஸ்வராஜை, ஏனோ ஆர்.எஸ்.எஸ். தலைமைக்குப் பிடிக்கவில்லை. இதனால் மூவரும் கர்முர் என்றே எப்போதும் இருக்கிறார்கள். இது மும்பை செயற்குழுவிலும் எதிரொலித்தது. செயற்குழு முடிந்த அன்று மாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. அதில்கூட கலந்து கொள்ளாமல் அத்வானி, சுஷ்மா இருவரும் டெல்லி வந்து விட்டார்கள். எனவே, அந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடிதான் கம்பீரம் காட்டினார். அதனால் பி.ஜே.பி-க்கு இப்போது நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிவது மோடி மட்டும்தான். ஆனால், அவருக்கு எதிராகவும் குஜராத்திலிருந்தே சிலரை தூண்டிவிடும் காரியமும் தொடங்கிவிட்டது. இந்தக் களேபரத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவர்கள் நிறைவேற்றிய அரசியல் தீர்மானமே வெளியில் தெரியாமல் போய்விட்டது.

 ஆ.ந.சசிகுமார், பொள்ளாச்சி-1.

கழுகார் பதில்கள்

முதல்வர் ஜெயலலிதா ஆதரித்துள்ள சங்மா, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரா?

அது பி.ஜே.பி-யின் கையில் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான நிலைமைதான் உள்ளது. ஆனால், பாரதிய ஜனதாவும், இரண்டு அணிகளையும் சேராத மற்ற சில கட்சிகளும் சேர்ந்தால், காங்கிரஸ் வேட்பாளரைத் தோல்வி அடையச்

கழுகார் பதில்கள்

செய்ய முடியும். எனவே, பாரதிய ஜனதா எடுக்கும் முடிவைப் பொறுத்தே புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரும்.

 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.

கழுகார் பதில்கள்

எடியூரப்பா - அச்சுதானந்தன் இருவரும் சிக்கலில் இருந்து மீள்வார்களா?

இரண்டு பேரின் சிக்கல்களும் வெவ்வேறு. எடியூரப்பா சிக்கி இருப்பது கரன்சியில். அச்சு சிக்கியிருப்பது கோஷ்டியில். எடியூரப்பாவை சி.பி.ஐ. விடுவிக்கலாம். ஆனால், அச்சுதானந்தனை பினராய் விஜயன் விடவே மாட்டார்.

 வரகுணராஜ், வள்ளியூர்.

கழுகார் பதில்கள்

மன்மோகன்சிங்கை 'சிகண்டி’ என்று பிரசாந்த் பூஷண் கமென்ட் அடித்தார். காங்கிரஸ் கொந்தளித்ததும், பிரசாந்த் பூஷண் அதை வாபஸ் வாங்கி விட்டாரே. அத்தனை மோசமான பெயரா அது?

மகாபாரதத்தில் வரும் பாத்திரம்தான் சிகண்டி. ஆண் உருவம் தாங்கிய பெண். பீஷ்மரை வீழ்த்த நினைத்த அர்ச்சுனன், சிகண்டியை முன்னிறுத்தி ஏமாற்றிக் கொல்வார் என்கிறது அந்தக் காப்பியம். ஆண் உருவம் தாங்கிய பெண் என்பதையும், ஏமாற்றம் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர் என்பதையும் காங்கிரஸ்காரர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

 எஸ்.வி.அருணாசலம், பாளையங்கோட்டை

கழுகார் பதில்கள்

ஆதீனங்கள் அடித்துக்கொள்வது ஆன்மிகத்தைக் காப்பாற்றுவதற்காகவா?

சில தனிமனிதர்களை நம்பி ஆன்மிகம் இல்லை. அது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இருக்கிறது. 'நிலை பேறு இல்லாத உலகு’ என்று பாமரர்களுக்குப் போதித்துக்கொண்டு, இடத்துக்கும் மடத்துக்கும் நிலத்துக்கும் அடித்துக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார் நித்தியானந்தா.

நம்முடைய சமயக் காப்பியங்கள் அனைத்தும் வலியுறுத்துவது புலனடக்கம். 'பொறிகள் தம் எல்லையைவிட்டுப் புறஞ்செலாத மக்கள் வாழும் நாடு’ என்று கம்பன் சொல்வது இந்தப் புலன் அடக்கத்தைத்தான்.

 ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்

'மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படவே இல்லை’ என்கிறாரே ஜெயலலிதா?

ஜெயலலிதா பொய் சொல்கிறார். பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். இது அவருக்குச் செயல்பாடாகத் தெரியவில்லையா? புதிய புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அது செயல்பாடாகத் தெரியவில்லையா? இந்தப் புகார்களை மறைக்க எத்தனை குட்டிக்கரணங்கள் அடிக்கிறார்கள். அதுவும்செயல்​பாடாகத் தெரியவில்லையா? மத்திய அரசு செயல் படுகிறது, ஆனால், யாருக்காக என்பதுதான் கேள்வி!

 கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.

கழுகார் பதில்கள்

மதுரை அதிரடி கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டதில் மர்மம் உள்ளதா?

'மலை’ அளவு உள்ளது!

 அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

கழுகார் பதில்கள்

ஜால்ரா சத்தம் அதிகம் கேட்டது கடந்த ஆட்சியிலா?இந்த ஆட்சியிலா?

அப்போது நயமாய் கேட்டது, புலவர்களும் கவிஞர்களும் பங்கேற்றதால். இப்போது ராவாகக் கேட்கிறது, எம்.எல்.ஏ-க்களும் கட்சித் தலைவர்களும் மட்டுமே இருப்பதால்.

'புகழ்ந்தால் எனக்குப் பிடிக்காது’ என்ற வெறுப்பில் கருணாநிதி உட்கார்ந்து இருப்பதுபோலத் தெரியும். 'புகழ்வதைவிட உங்களுக்கு வேறு என்ன வேலை’ என்ற எதிர்பார்ப்பை ஜெயலலிதா முகத்தில் பார்க்க முடிகிறது!

 போடி.எஸ். சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்

'ஏர்செல் - மேக்சிஸ் பேர ஊழலில் தயாநிதிக்கு மட்டும் அல்ல, ப.சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு’ என உறுதியாகச் சொல்கிறாரே சுப்பிரமணியம் சுவாமி?

சி.பி.ஐ. அமைதியாய் இருப்பதைப் பார்த்தால், மேக்சிமம் பங்குகள் வேறு யார் யாருக்கோ போய் இருக்கும் போலத் தெரிகிறது. சுவாமி வழக்கை உச்ச நீதிமன்றம் பிரித்து மேயும்போதாவது அத்தனையும் வெளிச்சத்துக்கு வருகிறதா என்று பார்ப்போம்!

 ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்

ஆ.ராசாவுக்கு தி.மு.க-வில் செல்வாக்கு உயருமா?

அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகிறார்கள். ராசாவுக்கு சிலர் மீது கோபம் இருக்கிறது. அந்தக் கோபத்தைத் தணிக்கத் தேவையான ஏதாவது ஒன்று நடக்கலாம்!

 கே.வெங்கட், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

ஆயுதம் ஏந்துவதுதான் வன்முறையா?

ஆயுதம் ஏந்தத் தூண்டுவதும் வன்முறைதான். 'நான் எத்தகைய ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரி தீர்மானிக்கிறான்’ என்ற சொன்னவரின் வரிகள் அழுத்தமானவை!

 பா.சு.மணிவண்னன், திருப்பூர்-4.

கழுகார் பதில்கள்

பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசின் முடிவை எதிர்த்து மம்தாவும் கருணாநிதியும் போராட்டம் நடத்துவது காமெடி போல் தெரிகிறதே?

காமெடியேதான். காங்கிரஸ் கார் ஓட பெட்ரோல் வழங்குபவர்களே இவர்கள்தானே? இவர்​களது பங்க்குகளை மூடினால் மன்மோகன் திருந்த மாட்டாரா? அதைச் செய்யாமல் இவர்கள் போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்று​வதற்​காகத்தான். 'பெட்ரோல் விலை உயர்வை நானும் கண்டித்தேனே’ என்று கணக்குக் காட்டிக்​கொள்ளத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

கழுகார் பதில்கள்