Published:Updated:

மம்தா பதவியேற்பு விழாவில் புத்ததேவ் பங்கேற்பு?

விகடன் விமர்சனக்குழு

கொல்கத்தா, மே 19,2011

மேற்கு வங்க முதல்வராக திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் புத்ததேவ் பட்டாச்சாரியா பங்கேற்பது குறித்து அவரது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசித்து வருகிறது. ##~~##

தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, புத்ததேவ் பட்டாச்சாரியாவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பிமனுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

எனினும், பதவியேற்பு விழாவில் புத்ததேவ் பட்டாச்சார்யா பங்கேற்பது தொடர்பாக மேற்கு வங்கத்தின் கடும் வீழ்ச்சியை கண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சி இன்னும் வாய் திறக்கவில்லை.

ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்று விலகும் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நாளை நடைபெறும் விழாவில் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வராக நாளை மதியம் ஒரு மணிக்கு பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 3,200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.