Published:Updated:

``நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும்; மீண்டும் அதிமுக ஆட்சி" - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க வை ஒழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் தொட்டுப் பார்க்கக்கூட முடியாது” - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்கள் மாவட்ட எல்லையான தலைவாசலில் ஒன்றுகூடி வரவேற்பளித்தனர். தலைவாசல் பேருந்து நிலையத்திலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “பல்வேறு தடைகளைக் கடந்து இன்று உங்கள் முன் கட்சியின் பொதுச்செயலாளராக நின்றுகொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் சாதாரண கட்சித் தொண்டனால், ஒரு கட்சியின் உச்சக்கட்ட பொறுப்புக்கும் செல்லமுடியும் என்பதற்கு நானே ஒரு முன் உதாரணம். ஆனால், அ.தி.மு.க-வின் வளர்ச்சி பிடிக்காததால் இன்று ஆளுங்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம்மீது வைத்துவருகின்றனர். அ.தி.மு.க என்பது தொண்டர்களுக்கான கட்சியே தவிர, வாரிசுகளுக்கான கட்சி கிடையாது. ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கான கட்சி நடத்தாமல் குடும்பக்கட்சி நடத்திவருகிறார். இதில், அமைச்சர் துரை முருகன் வேற உதயநிதி மட்டுமல்ல, அவரின் மகன் இன்பநிதிக்கும் நானே உடன் இருப்பேன் என்று பேசுகிறார். இவரைப் போன்ற அடிமைகளால்தான் கட்சி இன்னும் பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

``நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும்; மீண்டும் அதிமுக ஆட்சி" - எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோர், கட்சியை வழிநடத்தும்போது சந்தித்த சோதனைகளை, நாமும் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் வகித்த பதவியை, தற்போது தொண்டர்கள் எனக்குக் கொடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் பொதுச்செயலாளராகதான் நான் பார்க்கிறேன். விரைவில் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பும் விதமாக வருகின்ற 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பிருக்கிறது. அப்படி வந்தால் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.