Published:Updated:

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, மே 19, 2011

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சாதி, மதம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ##~~##

கிராமம், நகர்ப்புறங்களில் வறுமைகோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் நடத்தும் இந்த கணக்கெடுப்பு வீட்டுவசதி நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் மற்றும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம் ஆகியவைகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும்.

நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களுக்காக நடத்தப்படும். இதன் முடிவுகள் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின்போது பயன்படுத்தப்படும்.

இந்தக் கணக்கெடுப்பின்போது சாதிவாரியான கணக்கெடுப்பும் நடைபெறுமென மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.